»   »  தீவிர வேட்டையில் ஹரிப்பிரியா

தீவிர வேட்டையில் ஹரிப்பிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொன்வண்ணனுடன் தான் நடித்த கோமதி நாயகம் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருக்கிறார் ஹரிப்பிரியா.

தெலுங்குத் திரையுலகில் முடிந்தவரை கவர்ச்சி காட்டிவிட்டு அப்படியே தமிழுக்குத் திரும்பியவர் ஹரிப்பிரியா. ஐஸ் என்ற படத்தில்அறிமுகமானார். அதில் பிரியங்கா திரிவேதியுடன் உடையிறக்க மோதலில் தோற்றார். அந்த அளவுக்கு பிரியங்கா பின்னி எடுத்திருந்தார்.

ஆனால், படத்தில் சதை இருந்த அளவுக்கு கதை இல்லாமல் போனதால், தயாரிப்பாளருக்கு தலையில் எட்டு முழ துண்டு தான் மிஞ்சியது.

படம் தோற்றாலும் ஹரிப்பிரியாவுக்கு சில வாய்ப்புக்கள் கிடைத்தன. கார்த்திக்குடன் என்றும் உன்னை நேசிப்பேன் என்ற படத்தில்நடித்தார். ஆனால், ஹீரோ கார்த்திக் ஆயிற்றே. படத்தின் சூட்டிங் நின்று நின்று நடந்தது. பின்னர் அப்படியே மொத்தமாக நின்றேபோய்விட்டது.

கார்த்திக்குக்கு ஏராளமான அளவில் ஒத்துழைப்பெல்லாம் தந்தும் வேஸ்ட் ஆனதில் வெறுத்துப் போன ஹரிப்பிரியா, தெலுங்குக்கேபோய்விட இருந்தார்.

அப்போது தான் பொன்வண்ணன் தனது படத்துக்குப் பூஜையைப் போட்டுவிட்டு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த விவரம் அறிந்துஅவரைச் சந்தித்தார்.

காசி படத்தைத் தயாரித்த அரோமா மணி எடுக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு தேறியது ஹரிப்பிரியாவுக்கு.

அண்ணாமலை சீரியலில் கோமதிநாயகம் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்த பொன்வண்ணனுக்குள் தூங்கிக் கொண்டிருந்தடைரக்டர் மீண்டும் எழுந்துவிடவே, கோமதிநாயகம் என்ற நாமகரணத்தையே சூட்டி புதிய படத்தைத் தொடங்கினார்.

கதை, திரைக்கதை, வசனத்தில் இருந்து டைரக்ஷன் வரை இவரே தான் பார்த்தார். அத்தோடு ஹீரோவும் இவரே. கேரளா, பாண்டிச்சேரி எனபல பகுதிகளிலும் எடுக்கப்பட்ட லோ-பட்ஜெட் படம் இது.

நெடுங்காலமாக எடுக்கப்பட்டு வந்த இந்தப் படம் ஒருவழியாய் முடிந்துவிட்டது.

ஆனால், இந்த இழுத்தடிப்பால் பொறுமை இழந்துபோன ஹரிப்பிரியா கடந்த ஒரு மாதமாகவே வேகவேகமாக அடுத்த படத்துக்குவாய்ப்பு தேடும் வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார்.

கையோடு கோமதிநாயகத்தில் தான் காட்டி வரும் சூடான கவர்ச்சி ஸ்டில்களோடு நாலாபக்கமும் சான்ஸ் வேட்டையில் இறங்கியிருக்கிறார்.அந்த கரம் ஸ்டில்களை தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மீடியேட்டர்கள் மூலமும் ரவுண்டுக்கு விட்டிருக்கிறார் ஹரிப்பிரியா.

படம் வெளியானால், கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் ஹரிப்பிரியாவின் கலைச்சேவை ரொம்பநாள் பேசப்படுமாம்.

வேட்டை உதவுமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil