For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலிவுட்டில் செட்டிலான தமிழ்நாட்டு பொண்ணு.. பர்த்டே பேபி ராதிகா ஆப்தேவின் வீடு என்னம்மா இருக்கு!

  |

  மும்பை: தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ராதிகா ஆப்தே இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

  நாடு முழுவதும் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

  எங்களின் கடைசி உரையாடல்… விவேக்கை நினைந்து உருகும் கௌதம் மேனன்!எங்களின் கடைசி உரையாடல்… விவேக்கை நினைந்து உருகும் கௌதம் மேனன்!

  மும்பையில் ராதிகா ஆப்தே குடியிருக்கும் வீட்டிற்குள் ஒரு சின்னதா ஒரு ஹோம் டூர் போயிட்டு வரலாம் வாங்க!

  ஹேப்பி பர்த்டே ராதிகா ஆப்தே

  ஹேப்பி பர்த்டே ராதிகா ஆப்தே

  தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் பிறந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அப்பா அம்மா இருவரும் மருத்துவர் என்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக செல்ல வேண்டிய நிலை உருவானது. தமிழ் நாட்டில் பிறந்தநாளும் வளர்ந்தது படித்தது எல்லாம் புனேவில் தான். 1985ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிறந்த ராதிகா ஆப்தே இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

  தமிழ் படங்கள்

  தமிழ் படங்கள்

  பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ராதிகா ஆப்தே தமிழிலிலும் பல படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகர் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  நிர்வாண சர்ச்சை

  நிர்வாண சர்ச்சை

  பார்ச்சட் எனும் படத்தில் நிர்வாணமாக நடித்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து வெப் தொடர்களில் போல்டாக ஏகப்பட்ட காட்சிகளில் நடித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும் சிறந்த நடிப்பால் அந்த சர்ச்சைகளை கடந்து சென்று கொண்டே இருக்கிறார்.

  கணவர் யார் தெரியுமா

  கணவர் யார் தெரியுமா

  நடிகை ராதிகா ஆப்தேவுக்கு 2012ம் ஆண்டே திருமணம் ஆகி விட்டது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வயலின் இசைக் கலைஞரான பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சொந்த வாழ்க்கையை மிகவும் பிரைவேட்டாகவே வைத்திருக்கிறார். ராதிகா ஆப்தேவுக்கு திருமணம் ஆன விஷயமே பலருக்கு தெரிந்திருக்காது.

  மும்பையில் வீடு

  மும்பையில் வீடு

  வேலூரில் பிறந்து புனேவில் வளர்ந்த நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகையாக கலக்கி வரும் நிலையில், மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை ராதிகா ஆப்தேவும் அவரது கணவரும் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  கணவரின் சாய்ஸ்

  கணவரின் சாய்ஸ்

  நடிகை ராதிகா ஆப்தேவின் வீடு பிரம்மாண்டமான மாளிகையாக இல்லாமல், சிம்பிள் ஹோமாக உள்ளது. இந்த வீட்டில் இருக்கும் அனைத்தும் அவரது கணவர் அழகாக ரசித்து ரசித்துப் பார்த்து வடிவமைத்தது என வட இந்திய மீடியாவுக்கு ஒரு முறை அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதால் உயரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராதிகா ஆப்தே தனது கணவருடன் வசித்து வருகிறாராம்.

  சம்பளம் எவ்வளவு

  சம்பளம் எவ்வளவு

  நடிகை ராதிகா ஆப்தே மற்ற நடிகைகள் போல வரிசையாக படங்கள் நடித்து ஹீரோக்களுடன் டூயட் பாடும் நடிகைகள் போல அல்லாமல், தனக்கு கதை பிடித்தால் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தனித்துவமாய் திகழ்கிறார். ஒரு படத்துக்கு சுமார் 2 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

  மொத்த சொத்து

  மொத்த சொத்து

  படங்களை தவிர ஏகப்பட்ட பிரண்டுகளுக்கு விளம்பர தூதராக பணியாற்றி வரும் நடிகை ராதிகா ஆப்தே அதில் தான் அதிகமாக சம்பாதித்து வருகிறார். ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் இவரது மொத்த சொத்து 37 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த பிறந்தநாளையும் தனது கணவருடன் கொண்டாடி வரும் ராதிகா ஆப்தே விரைவில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஷேர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேப்பி பர்த்டே ராதிகா ஆப்தே!

  English summary
  Indian actress Radhika Apte celebrates her 36th birthday today. Radhika Apte’s Mumbai home photos goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X