»   »  நயன்தாராவின் உதடுகளுக்கு ரொம்பப் பக்கத்துல போயிராதீங்க.. உங்க வாய் கிழிஞ்சிரும்!

நயன்தாராவின் உதடுகளுக்கு ரொம்பப் பக்கத்துல போயிராதீங்க.. உங்க வாய் கிழிஞ்சிரும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநாள் படத்தில் நயன்தாரா வாயில் பிளேடு வைத்திருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ராம்நாத் இயக்கத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள படம் திருநாள். ஈ படத்தை அடுத்து மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். காதலும், காமெடியும் கலந்த படமாக உருவாகியுள்ளது திருநாள்.

படத்தில் நயன்தாரா அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணியில் வருகிறார். இந்நிலையில் தான் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஜீவா நயன்தாராவின் உதடுகளுக்கு அருகே வர அவரோ தன் வாயில் வைத்திருந்த பிளேடை வெளியே எடுத்துக் காட்டுகிறார்.

குடும்பத்துப் பெண்ணாக நடிக்கும் அவர் வாயில் பிளேடு இருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக உள்ளது. இந்த படம் நாளை ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்தால் குத்துவிளக்கு பக்கத்தில் போன கும்தலக்காவா என்று வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.

English summary
Nayanthara was seen having blade in her mouth in Thirunaal which will hit the screens tomorrow.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil