»   »  நான் அட்வைஸ் கேட்டேனா? பெருசா வந்துட்டாங்க: நடிகை கோபம்

நான் அட்வைஸ் கேட்டேனா? பெருசா வந்துட்டாங்க: நடிகை கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கர்ப்பம் குறித்து நான் யாரிடமும் அறிவுரை கேட்கவில்லை என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இந்த மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனுக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கரீனாவை அவரது மாமியார் ஷர்மிளா தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் கரீனா மும்பையில் குழந்தையை பெற முடிவு செய்துள்ளார்.

கரீனா

கரீனா

நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் கரீனா தனது அக்காவான நடிகை கரிஷ்மா கபூர் மற்றும் தோழிகளுடன் கடைகள், ஹோட்டல்கள், பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்.

அறிவுரை

அறிவுரை

மக்கள் ஆளாளுக்கு அவர்களாகவே என்னிடம் வந்து கர்ப்பம், பிரசவம் பற்றி அறிவுரை வழங்கி வருகிறார்கள். அறிவுரை செய்யுமாறு நான் கேட்டேனா என கரீனா தெரிவுத்துள்ளார்.

வாழ்க்கை

வாழ்க்கை

பிரசவத்திற்கு பிறகு வாழ்க்கையே மாறிவிடும். எது சரி, எது தவறு என்று நான் கேட்காமலேயே அறிவுரை வழங்குவது எரிச்சலாக உள்ளது. என் வாழ்வின் முக்கியமான நேரம் இது என்கிறார் கரீனா.

குழந்தையின் பெயர்

குழந்தையின் பெயர்

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று இன்னும் யோசிக்கவே இல்லை. குழந்தைக்கு தேவையான பொருட்களும் வாங்கவில்லை. எங்களுக்கு தோன்றும்போது வாங்குவோம். பிரசவம் முடிந்த ஒரு மாதத்தில் மீண்டும் நடிப்பை தொடர்வேன் என்று கரீனா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Kareena Kapoor Khan is irritated by people who advises her about pregnancy and delivery.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil