»   »  நினைத்தவாறு செக்ஸ் வைத்துக் கொள்வது பெண் சுதந்திரமா... சோனாக்ஷி கிடுக்கிப்பிடி!

நினைத்தவாறு செக்ஸ் வைத்துக் கொள்வது பெண் சுதந்திரமா... சோனாக்ஷி கிடுக்கிப்பிடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முரண்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து முன்வைக்கும் புதிய கலாச்சாரம் நமது நாட்டில் பெருகி வருகிறது. அதை எதிர்ப்போர் பத்தாம் பசலி என்று வர்ணிக்கப்படுகிறார்கள். ஆதரிப்போர் முற்போக்குவாதிகள் என்று கூறப்படுகிறார்கள். இதில் சில நேரம் நல்லதும் இருக்கிறது. கெட்டதாகவும் போய் விடுகிறது.

இப்போது பெண் சுதந்திரத்தை முன்வைத்து நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு குறும்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மை சாய்ஸ் என்பது அந்தப் படத்தின் பெயர். ஹோமி அட்ஜானியா இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் இந்த குறும்படம் உள்ளது.

மை சாய்ஸ்

மை சாய்ஸ்

இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை, திருமண வாழ்க்கை, தனித்து இருப்பது, லெஸ்பியனாக, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து, திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது என எதுவாக இருந்தாலும் அதில் சுயமாக சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை இந்த குறும்படம் வலியுறுத்துகிறது.

தீபிகாவின் குறும்படம்

தீபிகாவின் குறும்படம்

தீபிகா உள்ளிட்ட பல்துறைப் பிரபலப் பெண்கள் இதில் நடித்துள்ளனர். விதம் விதமான டிரஸ்களில் வருகின்றனர். இந்தப் படத்திற்கு பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் வழக்கம் போல ஆதரவு கிடைத்துள்ளது. பார்த்து் குமிக்கிறார்கள். ரிலீஸான 2 நாளில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து விட்டனர்.

99 பெண்கள்

99 பெண்கள்

மொத்தம் 99 பெண்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். தத்தமது சுதந்திரம் குறித்தும், முடிவெடுக்கும் அதிகாரம் குறித்தும் அவர்கள் விளக்குகிறார்கள்.

தூக்கி எறியுங்கள்

தூக்கி எறியுங்கள்

நெற்றியில் பொட்டு வைப்பது, கணவர் பெயரை சேர்த்து வைப்பது உள்ளிட்டவை அனைத்தும் தூக்கி எறியப்படக் கூடியவை என்று அதில் காட்டப்படுகிறது.

தனிப்பட்ட எண்ணம்

தனிப்பட்ட எண்ணம்

இதுகுறித்து தீபிகா கூறுகையில், இது எனது தனிப்பட்ட எண்ணம். தற்போது பெண்கள் கூண்டில் அடைக்கப்பட்ட எண்ணங்களில் இல்லை. நீங்கள் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் இருக்க கூடாது உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதுபடி செயல்படுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கூடிய செயல்களை மட்டும் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

பெண்கள் எதிர்ப்பு

பெண்கள் எதிர்ப்பு

அதேசமயம், இது பெண்களின் சுதந்திரத்தைச் சொல்வது போல இல்லை, வரம்பு மீறுவதாக உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. பல பெண் பிரபலங்களே இதை விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.

எப்படி சாத்தியமாகும்

எப்படி சாத்தியமாகும்

நடிகை சோனாக்ஷி சின்ஹா இதுகுறித்துக் கூறுகையில், எப்போதுமே நீங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நீங்கள் நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. இது சாத்தியமானதல்ல என்று கூறியுள்ளார்.

இதுவா முன்னேற்றம்

இதுவா முன்னேற்றம்

நினைத்தவாறு செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதும் பெண்களின் முன்னேற்றம் என்று கூற முடியாது.

இன்னும் கிடைக்கவில்லை

இன்னும் கிடைக்கவில்லை

உண்மையில் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் பெண்களை மேம்படுத்தி மேலே கொண்டு வர வேண்டும். உண்மையிலேயே சுதந்திரம் தேவைப்படும் பெண்களுக்கு அது இன்னும் கிடைத்தபாடில்லை என்பது எனது கருத்தாகும் என்றார் சோனாக்ஷி.

English summary
Sonakshi Sinha said: "I feel that it is not always about who you want to have sex with and the kind of clothes you wear. It is about employment, strength and stuff like that." Actress Sonakshi Sinha thinks Deepika Padukone‘s online video “My Choice” comes with good intentions but feels more needs to be done on women empowerment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil