»   »  கமலுடன் ஹேமமாலினி!

கமலுடன் ஹேமமாலினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Hemamalini
முன்னாள் ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி மீண்டும் தமிழுக்கு வருகிறார். இம்முறையும் கமல் படத்தில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் ரசிகர்களை லயிக்க வைத்தவர் ஹேமமாலினி. மயிலாப்பூரில் பிறந்து மும்பைக்கு இடம் பெயர்ந்து இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர் ஹேமா. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஹேமா. இவரது உறவுப் பெண்தான் மதுபாலா. இவரும் தமிழில் ஒரு ரவுண்டு அடித்தவர்.

இப்போது அரசியலில் புகுந்துள்ள ஹேமமாலினி ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார். முன்பு நாட்டின் அட்ராக்ஷ்னாக இருந்த ஹேமா, இப்போது ராஜ்யசபாவின் அட்ராக்ஷ்னாக மாறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார் ஹேமா. கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில், அவரது மாமியாராக நடித்தார்.

இந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஹேமாவைத் தேடி வந்துள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மர்மயோகி படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நிறைய நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

அதில் ஒரு நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஹேமாவை அணுகினார் கமல். அவர் கொடுத்த ஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்த ஹேமா, சம்பளம், கால்ஷீட் குறித்து எதுவும் பேசாமல் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒற்றை வரியில் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

கமல்ஹாசன் இயக்கும் இப்படத்தில், முன்னாள், இன்னாள் நாயகிகள் பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் தொடங்க கமல் திட்டமிட்டுள்ளார்.

தசாவதாரம் இப்போதுதான் முடிந்துள்ளது. அதற்குள் அடுத்த படத்திற்கு அஸ்திவாரம் போடத் தொடங்கி விட்ட கமல், ஒரு கர்ம யோகிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil