»   »  ஹேமமாலினியின் இரட்டை வேடம்

ஹேமமாலினியின் இரட்டை வேடம்

Subscribe to Oneindia Tamil

கனவுக் கன்னி என்று ரசிகர்களால் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட ஹேமமாலினி இந்தி டிவி தொடர் ஒன்றில் இரட்டைவேடங்களில் நடிக்க உள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஹேமமாலினி 70கள் மற்றும் 80களில் இந்தி திரையுலகில் கோலோச்சியவர். கனவுக் கன்னி என்றுரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தர்மேந்திராவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளையும்பெற்றுக் கொண்டார்.

(அதில் ஒருவர்தான் ஆய்த எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த இஷா தியோல்)

இன்னும் பழைய கவர்ச்சி போகாமல் அழகாக காணப்படும் ஹேமமாலினி இப்போது ஒரு எம்.பியும் ஆவார். இருந்தாலும்அவ்வப்போது படங்களில் நடிக்கவும் அவர் தவறுவதில்லை. கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் அவருக்கு அம்மாவாகநடித்திருந்தார்.

இப்போது இந்தி டிவி தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஹேமா. ரவிசோப்ராவின் தயாரிப்பில் உருவாகும் காமினி-டாமினி என்றுபெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் ஹேமா இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார்.

ஏராளமான படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் டிவி தொடரில் இரட்டை வேடத்தில் தான் நடிக்கவுள்ளதுமிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறார் ஹேமா.

ஹேமா நடித்த இரட்டை வேடப் படங்களில் அதிகம் பேசப்பட்டதும், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும் சீதா அவுர் கீதா என்றபடம்தான். ஜி.பி.சிப்பி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

இப்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடம் போடப் போகிறார் ஹேமா.

முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகர், நடிகைக்கு இருக்கும் அதே பரபரப்பும், டென்ஷனும் எனக்கும்இப்போது உள்ளது. இது மிகவும் வித்தியாசமான கதையப்ைபுடன் கூடிய சீரியல் என்கிறார் ஹேமா.

சஹாரா டிவியில் வருகிற 27ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை தினசரி இரவு 10மணிக்கு காமினி-டாமினி ஒளிபரப்பாகவுள்ளது.

டிவி தொடர்களில் சகாப்தம் படைத்த பி.ஆர். பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்தத் தொடரையும் தயாரிக்கவுள்ளது. பி.ஆர்.பிலிம்ஸின்மிகப் பெரிய படைப்பு மகாபாரதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமாவுக்கு ஜோடியாக பங்கஜ் தீர் (மகாபாரத்தில் கர்ணனாக நடித்தவர்) நடிக்கிறார். நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்குஏற்படும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொடரின் கதை.

ஏற்கனவே ஸ்ரீதேவி ஒரு சீரியலில் நடித்து கலக்கினார். இப்போது ஹேமாவும் கலக்க வருகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil