»   »  நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

நடிகைகள் தங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்றது போன்று சம்பளம் வாங்குகிறார்கள். படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதிக்கிறார்கள்.

இந்நிலையில் முன்னணி நடிகைகளின் சம்பள விபரம் தெரிய வந்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா படம் ஒன்றுக்கு ரூ. 4 கோடி சம்பளம் வாங்குகிறார். தற்போது மார்க்கெட் டல்லடித்துள்ளதால் தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளாராம் நயன்தாரா.

அனுஷ்கா

அனுஷ்கா

பாகுபலி 2 மெகா ஹிட்டுக்கு பிறகு அனுஷ்கா படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி சம்பளம் கேட்கிறார். தற்போது அவர் பாக்மதி தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

காஜல்

காஜல்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் அகர்வால் படம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வாங்குகிறார். தமிழில் விஜய்யுடன் மெர்சல், அஜீத்துடன் விவேகம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமந்தா

சமந்தா

அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் சமந்தா படம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி கேட்கிறார். அவர் தற்போது விஜய்யின் மெர்சல், சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷா

சீனியர் ஹீரோயினான த்ரிஷா படத்திற்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறாராம். அம்மணி கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங், தமன்னா ஆகிய நடிகைகள் படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார்களாம். தமன்னா தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சொன்னால் அடம்பிடிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Salary details of the leading ladies of Kollywood has been revealed. Anushka is the highest earning actress of Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil