அந்த ஒரு பெயரால் திடீரென டிரெண்டான அதிதி ஷங்கர்....ஏன் அப்படி என்ன ஆச்சு?

சென்னை : டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், மாடலிங் துறையில் இருந்து தற்போது நடிகையாக அறிமுகமாகி உள்ளார். கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் இவர் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா இயக்கி உள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதே நாளில் விக்ரமின் கோப்ரா படம் ரிலீஸ் ஆக உள்ளதால், விருமன் படத்தை ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் முடிவு செய்து, தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

பாவாடை தாவணியில் வந்த அதிதி

பாவாடை தாவணியில் வந்த அதிதி

விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, யுவன்சங்கர் ராஜா, அதிதி ஷங்கர், டைரக்டர் ஷங்கர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாவாடை தாவணியில் வந்த கலந்து கொண்டார் அதிதி.

 டிரெண்டிங்கில் கலக்கும் அதிதி

டிரெண்டிங்கில் கலக்கும் அதிதி

மேடையில் விருமன் பட பாடலை இசையைமப்பாளர் யுவனசங்கர் ராஜாவுடன் இணைந்து பாடி அசத்தினார் அதிதி. விருமன் ஆடியா விழா பற்றிய போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் திடீரென #AditiShankar ஹேஷ்டேக் டிரெண்டானது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஏன்..அப்படி என்ன நடந்தது

ஏன்..அப்படி என்ன நடந்தது

ஆடியோ விழா பற்றிய தகவலோ, கார்த்தி, சூர்யா, விருமன் போன்ற விஷயங்களோ டிரெண்டாகாத நிலையில் அதிதி ஷங்கர் எதற்காக டிரெண்டிங் ஆனார் என அனைவரும் குழம்பிப் போயினர்.விழாவில், சூர்யா மேடை ஏறியதும் ரசிகர்கள் அனைவரும் ரோலக்ஸ்...ரோலக்ஸ் என கூச்சலிட்டனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அதிதியும் ரோலக்ஸ்...ரோலக்ஸ் என கூச்சலிட்டுள்ளார்.

கார்த்தி பக்கத்தில் இருந்தும் இப்படியா

கார்த்தி பக்கத்தில் இருந்தும் இப்படியா


கார்த்தி பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ரோலக்ஸ் பெயரை சொல்லி அவர் கத்தியது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ செம வேகமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. விக்ரம் படம் ரிலீசாகி 2 மாதங்கள் ஆன பிறகும் ரோலக்ஸ் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கார்த்தியை தொடர்ந்து சிவகார்த்திகேயன்

கார்த்தியை தொடர்ந்து சிவகார்த்திகேயன்

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி, அடுத்ததாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.இந்த தகவலும் இன்று சேர்ந்து கொண்டதால் அதிதி ஷங்கர் இன்று ட்விட்டர் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X