»   »  'டான் டான்' என்று சண்டை போட்டு காலில் அடிபட்டுக் கொண்ட சிருஷ்டி டாங்கே!

'டான் டான்' என்று சண்டை போட்டு காலில் அடிபட்டுக் கொண்ட சிருஷ்டி டாங்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சமின்றி படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாம். ஆனபோதும், உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு தனது காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம் சிருஷ்டி.

'என்னமோ நடக்குது' படத்தை அடுத்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் வி.வினோத்குமார் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி' இப்படத்தில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, கருணாஸ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஷ்வின், ஜெயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். ‘என்னமோ நடக்குது', ‘ஆம்பள' ஆகியப் படங்களுக்கு வசனம் எழுதிய ராதாகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை எழுதி ராஜபாண்டி இயக்குகிறார்.

சென்னையில் படப்பிடிப்பு...

சென்னையில் படப்பிடிப்பு...

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய் வசந்த் மற்றும் சிருஷ்டி பங்கு பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டு வருகிறது.

பின்னி மில்லில்...

பின்னி மில்லில்...

இது தொடர்பாக இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில், "படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஸ்டன்ட் காட்சிகள்...

ஸ்டன்ட் காட்சிகள்...

பரத் ரெட்டி, சேரன் ராஜ், ஜெயகுமார், ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய்வசந்தும் - சிருஷ்டி டாங்கேவும் தப்பிப்பது போன்று ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது.

சிருஷ்டி காயம்...

சிருஷ்டி காயம்...

ஸ்டன்ட்டின் போது எந்த வித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டி டாங்கே பங்கேற்றதால் கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அச்சமின்றி...

அச்சமின்றி...

இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை கமர்ஷியலாக ‘அச்சமின்றி'யாக உருவாக்கி வருவதாக விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வினோத்குமாரும் கூறுகின்றனர்.

English summary
Srushti Dange, the heroine of actor Vijay Vasantha's Achamindri movie, was injured in the shooting spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil