»   »  ஹீரோயின்கள் சான்ஸ் பிடிக்க என்னென்னல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?

ஹீரோயின்கள் சான்ஸ் பிடிக்க என்னென்னல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாம தான பேத தண்டம் நாலும் தோற்றுப் போகும்போது தகிடுதத்தோம் என்பது சினிமாவில் உண்மையான ஒன்று. ஏன் நீங்க அதிகம் படங்கள் பண்ணுவதில்லை? என கேட்டால் 'நான் வாய்ப்புக்காக இறங்கிப் போறவ கிடையாது...' இது பொதுவாக நடிகைகள் சொல்லும் டயலாக். அந்த இறங்கிப் போவது என்பதற்கான அர்த்தங்கள் நிறைய.

இப்போது வாய்ப்புக்காக ரொம்பவே இறங்கிபோய் அடித்துக்கொள்ளும் நிலைக்கே வந்துவிட்டனர். ஒரு நடிகையின் மார்க்கெட்டை கெடுக்க மற்ற நடிகைகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை கோலிவுட்டில் அலசினோம். சில நடிகைகளின் முன்னாள், இன்னாள் மேனேஜர்கள் நிறைய விஷயங்களை புட்டுப் புட்டு வைத்தனர்.

Heroines secret netiquettes to get chances

கிளாமர்

இதுதான் முதல் ஆயுதம். ஒரு நடிகை வாய்ப்புகள் குறைவது போல தெரிந்தால் தான் ஆடைகளை குறைப்பார். அந்த கால நடிகைகளில் இருந்து இந்த காலம் வரைக்கும் இது பொருந்தும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இளம் ஹீரோயின்கள் அதிகமாக களம் இறங்க ஆரம்பித்தனர். அவர்களுடன் போட்டிப் போட முடியாமல் சீனியர் நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுத்தனர். இப்போது பதிலுக்கு லட்சுமி மேனன், ஆனந்தி, ஸ்ரீதிவ்யா போன்ற ஜுனியர் நடிகைகளும் கிளாமர் ஆயுதத்தை கையில் எடுக்கப் போகிறார்களாம். எக்ஸ்ட்ரா பேமெண்ட் இல்லாமல் கிளாமர், நெருக்கம் காட்டினால் தயாரிப்பாளருக்கு லாபம் தான்!

ஆபாசப் படங்கள்

போட்டி நடிகைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்புவது, மார்ஃபிங் செய்துவிடுவது என கன்றாவி விஷயங்களும் அரங்கேறுகின்றன. ஆனால் இந்த ஆபாச விஷயங்கள் சிலருக்கு ப்ளஸ்சாக போய்விடுவதால் இந்த வழியை இப்போது நாடுவதில்லை நடிகைகள்.

பார்ட்டிகள்

சான்ஸ் பிடிப்பதற்காகவே பார்ட்டிகள் நடத்தும் நடிகைகள் இங்கே ஏராளம். இதற்கு முன்பெல்லாம் பார்ட்டி பக்கமே எட்டிக்கூடப் பார்க்க மாட்டார் 'மார்க்கெட்' நடிகை. ஆனால் இப்போது ரீ எண்ட்ரியில்தான் சித்தி காவல் இல்லையே... எனவே பார்ட்டிகளில் எல்லை தாண்டிச் செல்கிறாராம்.

சமீபத்தில் பார்ட்டிகளால் ரீ எண்ட்ரி தந்தவர்தான் அந்த ஸ்வீட் ஸ்டால் நடிகை. இந்த பார்ட்டிகளுக்கு சுமார் 5 லட்சம் வரை செலவாகும். பார்ட்டி என்றால் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வருவார்கள் என நினைத்தால் தவறு. ஒரு குறிப்பிட்ட பிரபலத்தை கவிழ்க்கவே பார்ட்டி கொடுப்பார் நடிகை. அந்த நடிகருக்கோ, இயக்குநருக்கோ தண்ணி முதல் சகல கவனிப்பும் நடக்கும். இது தவிர, வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஹீரோக்களை 'கவனிப்பதும்' நடக்கும். எந்த நடிகருக்கு எது செய்தால் பிடிக்கும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட்டால் வாய்ப்புகள் கிடைக்கும்.

மேகமான படத்தில் அறிமுகமான கதாநாயகி அவர். அவர் வைக்கும் பார்ட்டிகள்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாக். ஒரு பேட்டியில் நேரடியாகவே சின்ன குஷ்பு நடிகைக்கு நான்தான் போட்டி என சொன்னவர் சொன்னதை நிறைவேற்றும் வகையில் சின்ன குஷ்புவைத் தேடும் டைரக்டர்களை அழைத்து பார்ட்டியுடன் விருந்து வைக்கிறாராம். அடுத்தது படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படும் அசிஸ்டெண்ட் டைரக்டர்களைக் கூட விடுவதில்லையாம்.

சரி, இப்படியெல்லாம் இறங்காத நடிகைகள் இருக்கிறார்களா? என கேட்டால் இருக்கிறார்கள். கண்மணி நடிகை, மலர் நடிகை என சிலர் எதற்கும் மசியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும்?

ஹீரோயின்களின் கேரியர் என்பதே மிக குறுகிய ஒன்று. இப்போதெல்லாம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் நடிப்பதே பெரிய விஷயம். இதுதான் இந்த போட்டி, பொறாமைகளுக்கெல்லாம் காரணம்.

- கட்டப்பா

English summary
How heroines are fetching new chances in Tamil cinema? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil