»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வயதாகிப் போனாலும் திரையுலகை விட்டு நகர மறுத்து வருகின்றனர் பாட்டி நடிகைகள். அது மட்டுமல்லாமல் நடிகர்களுக்குஇணையாக சினிமா தயாரிப்பு, டி.வி. நிறுவனம் நடத்துவது என எல்லாத் துறைகளிலும் சக்கை போடு போட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் நடிகைகள் இளமை ஊஞ்சல் ஆடும் வரை நடித்து, சம்பாதித்துவிட்டு பின்னர் காணாமல் போவார்கள்.அமெரிக்காவில் கணவரோடு வசிக்கப் போகிறேன், லண்டனில் ஓட்டல் நடத்துகிறேன் என்று கூறிவிட்டுச் செல்லும் இவர்கள்கொஞ்ச காலத்துக்குப் பின் சென்னை திரும்பி அண்ணி முதல் அம்மா வரை எல்லா வேடத்திலும் நடிப்பார்கள்.

இப்போதெல்லாம் வயதாகிவிட்டதா, சான்ஸ் கிடைக்கவில்லையா... உடனடியாக சொந்தப் படம் எடுக்கத் தயாராகி விடுகின்றனர்பல முன்னாள் முன்னணி நடிகைகள்.

மற்றவர்கள் சின்னத்திரைக்கு தாவி விடுகின்றனர். இப்போது தான் டி.விக்களில் காலை-1, மதியம்-2, இரவு-1 என்று மாத்திரைசாப்பிடுவது போல மெகா, கிகா தொடர்கள் எல்லாம் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தத் தொடர்களில் இடம் பிடிக்க இந்தமுன்னாள் கனவுக் கன்னிகள் முட்டி மோதுகின்றனர்.

தமிழிலும், தெலுங்கில் ஷோபன் பாபு, என்.டி. ராமாராவ் போன்ற பழுத்த பழங்களுடன் ஜோடியாக நடித்த ஜெயசுதா இப்போதும்கூட நடித்துக் கொண்டு தான் இருக்கிறர். ஷோபன் பாபு திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் அவருடன் நடித்தஜெயசுதா இப்போதும் திரையில் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் ஹான்ட்ஸ் அப் என்ற படத்தையும்சொந்தமாகத் தயாரித்தார்.

அதே போல ராதிகா. சினிமா சான்ஸ் இல்லை என்று கவலையெல்லாம் படாமல் டி.வி. தொடர் தயாரிப்பில் இறங்கி சக்கை போடுபோட்டு வருகிறார். அவரது ராடன் டி.வி நிறுவனம் சன் டிவிக்கு பல தொடர்களைத் தயாரித்துள்ளது. இப்போது கோடீஸ்வரன்நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.

அடுத்து விஜயசாந்தி. தமிழில் அறிமுகமாகி தெலுங்க்குப் போனார். அங்கு நமது ரஜினி மாதிரி வில்லன்களை புரட்டி புரட்டி,பறந்து பறந்து அடித்து வந்தார். இப்போது இவரிடம் அடிவாங்க வில்லன்கள் தயாராக இருந்தாலும் இந்த அடிதடி-உதைகளைப்பார்க்க ரசிகர்கள் குறைந்துவிட்டார்கள். பலன், புதிய படங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து தனது பினாமிகள் மூலம் தானேபடத்தை எடுக்கும் முயற்சியில் தாவியிருக்கிறார்.. சாரி இறங்கியிருக்கிறார் விஜயசாந்தி.

ரோஜாவின் நிலைமை கொஞ்சம் பாவம் தான். இளம் ஹீரோயினாக எல்லோர் மனதையும் கொள்ளை அடித்த இந்த கருப்பு ரோஜாபல பிரச்சனைகளில் சிக்கினார். ஆனால், மனம் தளரவில்லை. பல படங்கள் எடுத்தார். அனைத்திலும் நஷ்டம் தான். இப்போதுதனது காதலர் செல்வமணியுடன் சேர்ந்து அடுத்த படம் தயாரிக்க தயாராகி வருகிறார்.

ஆனால், நடிகர்களைப் பொறுத்த வரை, சான்ஸ் இல்லாவிட்டாலும் கூட சிவக்குமார், நெப்போலியன், கார்த்திக் போன்றவர்கள்படம் எடுப்பது குறித்து நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ரஜினி, கமல், சத்தியராஜ் தவிர பெரும்பாலான முன்னாள் சூப்பர் ஹிட்ஹீரோக்கள் யாரும் சினிமாவில் பணத்தை விடத் தயாராக இல்லை.

ஆனால், மார்க்கண்டேயி ஷ்ரதேவி சினிமாவை விடத் தயாராக இல்லை. இப்போது கூட கஜோலை வைத்து படம் எடுக்கத்தயாராகி வருகிறார்.

சுசித்ரா என்றொரு நடிகை இருந்தாரே. அவர் கூட தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்.

ஹிந்தியிலும் நடிகைகள் பின் தங்கிவிடவில்லை. பூஜா பட். ஜூகி சாவ்லா ஆகியோர் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

சமீபத்தில் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வரும் மாதுரி தீட்சித் கூட தெலுங்கில் ஒரு படம் எடுக்க உள்ளார்.

இந்த நடிகைளை சினிமா கைவிட்டாலும் கூட சினிமாவை விட இவர்கள் தயாராக இல்லை. சினிமாவில் சம்பாதித்ததைசினிமாவில் முதலீடு செய்ய பல நடிகர்ளுக்கு இல்லாத தைரியம் நடிகைகளிடம் நிறையவே இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil