»   »  கல்யாணமானவருடன் காதல்: ஒப்புக் கொண்ட ஷில்பா!

கல்யாணமானவருடன் காதல்: ஒப்புக் கொண்ட ஷில்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
shilpaShetty with Rajkumar
லண்டனைச் சேர்ந்த கல்யாணமான இந்தியத் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுடன் தனக்கு காதல் இருப்பதை முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.

சில மாதங்களுக்கு முன்பு ஷில்பாவையும், ராஜ் குந்த்ராவையும் இணைத்து செய்திகள் வந்தன. ராஜ் குந்த்ராவின் மனைவி கவிதாதான் இதை பகிரங்கமாக வெளியிட்டார். தன்னையும், தனது கணவர் ராஜ் குந்த்ராவையும் பிரிக்க ஷில்பா முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இதை ஷில்பாவும், ராஜ் குந்த்ராவும் மறுத்திருந்தனர். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று வீராவேசமாக கூறியிருந்தார் ஷில்பா. ராஜ் எனது நண்பர் மட்டுமே என்றும் விளக்கியிருந்தார்.

ஆனால் இப்போது ராஜ் குந்த்ராவுடன் டேட்டிங் செய்வதாக ஒத்துக் கொண்டுள்ளார் ஷில்பா.

டெய்லி மெயில் இதழுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜ் குந்த்ராவின் பெயர் குறிப்பிடாமல் அவர் குறித்து கூறியுள்ளார் ஷில்பா. இதுகுறித்து ஷில்பா கூறுகையில், எனது நீண்ட கால தனிமை வாழ்க்கைக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு முடிவு கட்டியுள்ளது. எனது வாழ்க்கைப் பாதையை இந்த நட்பு மாற்றியுள்ளது.

எனக்கு சில காலமாகவே அவரைத் தெரியும். இருவரும் டேட்டிங் செய்கிறோம். இப்போதுதான் அவரை நன்கு புரிந்து கொள்ள முடிந்துள்ளது. எனக்கான அவர், அவர்தான் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இதற்கு மேலும் இதுகுறித்து விரிவாக பேச முடியாது என்று கூறியுள்ளார் ஷில்பா.

அந்த அவர் ராஜ் குந்த்ராதானே என்ற கேள்விக்கு, அப்படிக் கேட்டால் என்னால் மறுக்க முடியாது. இருப்பினும் பயந்து கொண்டு அவரது பெயரை நான் சொல்ல மறுப்பதாக நினைத்து விடக் கூடாது.

என்னை அவர் மிகவும் மதிக்கிறார், புரிந்து கொண்டிருக்கிறார். எனக்காக கவலைப்படுகிறார். எனக்காக பரிவு காட்டுகிறார்.

நான் நீண்ட காலமாகவே தனிமையில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட எனக்காக பரிவு காட்ட ஒருவர் இருக்கிறார் என்பது சந்தோஷமாக உள்ளது. எனது தனிமைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இப்போது நான் நார்மல் ஆக உள்ளேன்.

இந்த ஆண்டு முழுவதும் எனக்கு தனிமைதான் மிகப் பெரியதாக இருந்தது. வெளிநாட்டிலேயே நான் அதிக காலம் கழித்து விட்டேன். நீண்ட காலமாக எனக்கு நல்ல பாய் பிரண்ட் கூட கிடைக்கவில்லை. என்னைக் கவரும் வகையிலான ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.

நான் அழகாக இருப்பதாக பத்திரிக்கைகள் கூறிக் கொண்டே இருந்தன. என்னைக் கவர பல்லாயிரக்கணக்கான ஆண்கள் முயற்சித்தனர். ஆனால் யாருமே என்னிடம் தைரியமாக வந்து பேசவில்லை, தங்களது விருப்பத்தை சொல்லவில்லை. என்னைப் பார்த்து எல்லோரும் பயந்தார்களோ, என்னவோ.

என்னை விரும்பும் ஆண்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்குமே, என்னை அவர்களது அம்மாக்களிடம் கூட்டிக் கொண்டு செல்லும் தைரியம் இல்லை என்றார் சிரித்துக் கொண்டே ஷில்பா.

'பூனை' வெளியே வந்து விட்டது. 'மணி' கட்டுவது எப்போதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil