»   »  படுத்தால்தான் நடிக்க வாய்ப்பு... வதந்தியில்ல, நிஜமோ நிஜம்!- இளம் நடிகை பரபரப்பு

படுத்தால்தான் நடிக்க வாய்ப்பு... வதந்தியில்ல, நிஜமோ நிஜம்!- இளம் நடிகை பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது என மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் புகார் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகம் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது நடிகைகளுக்கென தனி அமைப்பே உருவாகியுள்ளது. மலையாள படஉலகில் நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் பற்றி இந்த அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

விருப்பப்பட்டு...

விருப்பப்பட்டு...

இதற்கு பதில் அளித்த நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட், நடிகைகளை படுக்கைக்கு அழைத்து யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சில நடிகைகளே பட வாய்ப்புக்காக விருப்பப்பட்டு அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.

ஹிமா சங்கர்

ஹிமா சங்கர்

இந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையாக உள்ள ஹிமா சங்கர் ஒரு புதிய பரபரப்பு புகாரை கூறி உள்ளார். கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், "நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது மலையாள சினிமா உலகை சேர்ந்த 2 பேர் என்னை சந்தித்து பேசினார்கள்.

படுத்தால் வாய்ப்பு

படுத்தால் வாய்ப்பு

அப்போது படுக்கையுடன் நடிப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். முதலில் எனக்கு அவர்கள் கூறியது புரியவில்லை. பின்னர் அவர்களே அதை விவரித்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.

வேணாம் அந்த வாய்ப்பு

வேணாம் அந்த வாய்ப்பு

அந்த நபர்களிடம் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டேன். எல்லோரும் பெண்கள் தங்கள் கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி துணிச்சலாக கருத்து தெரிவிக்கும் பெண்கள் மீது பாய்ந்து பிடுங்குகிறார்கள்," என்றார்.

English summary
Young Malayalam actress Hima Shankar alleges that sexual harrasement for actresses happening in Malayalam film industry in the name of movie oppurtunities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X