»   »  ஹோம்லியாக நடிப்பதே என் சாய்ஸ் - சொல்றது யாரு?

ஹோம்லியாக நடிப்பதே என் சாய்ஸ் - சொல்றது யாரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்தப் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் தாமிராவின் 'ஆண் தேவதை' படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக, ஆறு வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூர்டான ரோலில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

Homely girl is my choice, says Joker Actress

'ஜோக்கர்' படத்தைப் போலவே 'ஆண் தேவதை' படத்திலும் எனக்குக் குடும்பப்பாங்கான வேடம்தான்' எனச் சொல்லும் ரம்யா பாண்டியன், தொடர்ந்து இதே மாதிரி ஹோம்லியான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என உறுதியாகக் கூறுகிறார்.

Homely girl is my choice, says Joker Actress

'என்னைக் கவர்ந்த நடிகையான ரேவதியைப் போல சினிமாவில் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது' என்கிறார் ரம்யா.

எந்த மாதிரியான கதையில் நடிக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. பிளாங்க் மைண்டோடுதான் கதைகளைக் கேட்பேன். கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்' என உறுதியாகக் கூறுகிறார் ரம்யா பாண்டியன்.

English summary
'Joker' fame Ramya pandian acts as a mother of six year old child in 'Aan Dhevadhai' movie. She likes actress Revathi because of her homely roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil