»   »  ரசிகர்களை கிறங்கடித்த "கவர்ச்சி சிஸ்டர்ஸ்" ஜோதிலட்சுமி, ஜெயமாலினி !

ரசிகர்களை கிறங்கடித்த "கவர்ச்சி சிஸ்டர்ஸ்" ஜோதிலட்சுமி, ஜெயமாலினி !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் திரையுலகில் சகோதரிகள் சேர்ந்து நடிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் கவர்ச்சி நடிகைகளைாக வலம் வந்தவர்களில் ஜோதிலட்சுமியும், அவரது தங்கை ஜெயமாலினியும் முக்கியமானவர்கள்.

1970, 80களில் தங்களின் கவர்ச்சியால் திரையுலக ரசிகர்கள் கட்டிப் போட்டு வைத்திருந்தனர் இவர்கள் இருவரும். கவர்ச்சியுடன், வில்லத்தனம், குணச்சித்திரம் என கலவையான நடிகைகளாக வலம் வந்து முத்திரை பதித்தவர்கள் இருவரும்.

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி 1963ம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பெண் மூலம் நடிகையானவர். நடிப்பு மற்றும் தனது கவர்ச்சி நடனத்தால் திரையுலகில் வெற்றி நடை போட்டார். கவர்ச்சி நடனமா கூப்பிடு ஜோதிலட்சுமியை என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சொல்லும் அளவுக்கு பிரபலமாக இருந்தார்.

படங்கள்

படங்கள்

ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

ஜெயமாலினி

ஜெயமாலினி

8 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்தவர் ஜோதிலட்சுமியின் தங்கை ஜெயமாலினி. இவரும் அக்கா வழியில் அதிரடி கவர்ச்சி காட்டி திரையுலகிற்கு வந்தார்.

ஜோதிலட்சுமி

ஜோதிலட்சுமி

ஜெயமாலினியின் அதிரடி வரவால் ஜோதிலட்சுமியின் மார்க்கெட் சரிந்தது. இருப்பினும் நம் தங்கை தானே என பெருந்தன்மையாக இருந்தார் ஜோதிலட்சுமி. அக்காவை மிஞ்சிய தங்கையாக, ஜெயமாலினி தனது அக்காவை விட அதிக படங்களில் நடித்துள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

ராதிகா சரத்குமார் நடித்த அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் ஜோதிலட்சுமி வில்லி மாமியாராக நடித்திருந்தார். அதில் பொன்வண்ணன் தனது மாமியாரான ஜோதிலட்சுமியை கவர்ச்சிக் கிழவி என்று அழைத்தது அப்போது மிகவும் பிரபலம் ஆனது.

கவர்ச்சி ஏரி

கவர்ச்சி ஏரி

அதேபோல நடிகர் விவேக், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜோதிலட்சுமி செய்த காமெடி மறக்க முடியாதது. அதில் ஜோதிலட்சுமியை, கவர்ச்சி ஏரி என்று அழைப்பார் விவேக். அந்த வார்த்தையும் பிரபலமானது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஜோதிலட்சுமிக்கு ரத்த புற்றுநோய் இருந்தும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அதிலும் வள்ளி தொடரில் அவர் அழகான புடவைகள் அணிந்து ஃபுல் மேக்கப்பில் வருவதை பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது.

English summary
Hottie sisters Jyothilakshmi and Jayamalini were once admired by fans for their item numbers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil