»   »  தீபிகாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய நடிகை யார் தெரியுமா?

தீபிகாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய நடிகை யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
காளியான அஞ்சலி | தீபீகா படுகோன் பற்றி தெரியாத ஒன்று-வீடியோ

மும்பை: தீபிகா படுகோனே நடிகையாக யார் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் தீபிகா படுகோனே. இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க யார் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

ஃபரா கான்

ஃபரா கான்

டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான ஃபரா கான் தனது படமான ஓம் சாந்தி ஓமுக்கு புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க நடிகையை தேடியுள்ளார்.

மலாய்க்கா

மலாய்க்கா

தனது நெருங்கிய தோழியான நடிகை மலாய்க்கா அரோராவிடம் மாடல் அழகி யாரையாவது தனது படத்திற்கு பரிந்துரைக்குமாறு தெரிவித்துள்ளார் ஃபரா.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

மலாய்க்கா ஷாருக்கானுக்கு ஜோடி தேடியுள்ளார். ஃபேஷன் ஷோ ஒன்றுக்கு சென்றுள்ளார் மலாய்க்கா. நிகழ்ச்சியின் துவக்கமாக ராம்ப் வாக் செய்த மாடலை மலாய்க்காவுக்கு பிடித்துப் போய் ஃபரா கானிடம் பரிந்துரை செய்துள்ளார்.

தீபிகா

தீபிகா

மலாய்க்கா பரிந்துரை செய்த அந்த மாடல் தான் தீபிகா படுகோனே. தீபிகாவை ஃபரா கானுக்கும் பிடித்துப் போக ஓம் சாந்தி ஓம் படத்தின் ஹீரோயின் ஆனார்.

ஜோடி

ஜோடி

ஷாருக்கான்-தீபிகா படுகோனே பாலிவுட்டின் ஹிட் ஜோடிகளில் ஒன்று. அவர்கள் இருவரும் சேர்ந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்கள்.

English summary
Do you know that one of the Bollywood actresses had a small role to play in Deepika Padukone bagging her debut film, SRK starrer Om Shanti Om?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil