»   »  போங்க மாமா, எத்தனை தடவைதான் உங்களையே பாத்துட்டிருக்கிறது.. அலுத்துக் கொள்ளும் லட்சுமி!

போங்க மாமா, எத்தனை தடவைதான் உங்களையே பாத்துட்டிருக்கிறது.. அலுத்துக் கொள்ளும் லட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து கிராமத்து படங்களாகவே நடித்து அலுத்து விட்டதாக நடிகை லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து தனது தாவணி அல்லது சேலை கட்டிக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்து வருகிறார் லட்சுமிமேனன்.

அடுத்ததாக கார்த்தி இயக்கத்தில் லட்சுமிமேனன் நடித்துள்ள கொம்பன் திரைப்படமும் கிராமத்து படமே. இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியான காஸ்ட்யூமைப் பார்த்து அலுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் லட்சுமிமேனன்.

இது தொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ளப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

என் ஆசை...

என் ஆசை...

ஒரே காஸ்ட்யூமைப் பார்த்து அலுத்துடுச்சு. நான் நானாக இருக்கிற மாதிரி ரொம்ப கேஷ்வலான கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ஆசை.

இப்டியே இருந்தா எப்டி...?

இப்டியே இருந்தா எப்டி...?

ஒளிஞ்சு நின்னு போன் பேசுறது, தலை நிறைய மல்லிகைப் பூ வெச்சு மாமாவைப் பார்த்து சிரிக்கிறது. இப்படி ஒவ்வொரு படமும் கிராமத்துப் படமாவே இருந்தா எப்படி?

த்ரிஷா மேடம் மாதிரி...

த்ரிஷா மேடம் மாதிரி...

'விண்ணைத்தான்டி வருவாயா' என்னோட ஆல்டைம் ஃபேவரைட் படம். அதுல த்ரிஷா மேடத்துக்குக் கொடுத்த கேரக்டர் மாதிரி எனக்கு ஒரு கேரக்டர் கொடுங்களேன் டைரக்டர்ஸ் ப்ளீஸ்' எனத் தெரிவித்துள்ளார்.

மேற்படிப்பு...

மேற்படிப்பு...

தற்போது பிளஸ் டூ படித்து வரும் லட்சுமிமேனனுக்கு மேற்படிப்பு பெங்களூரில் படிக்க ஆசையாம்.

English summary
The actress Lakshimi menon has said that she was bored on doing same type of village roles by smiling at mama.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil