»   »  எவ்வளவு கிளீவேஜை காட்டலாம்?: வைரலாகும் டாப்ஸியின் வீடியோ

எவ்வளவு கிளீவேஜை காட்டலாம்?: வைரலாகும் டாப்ஸியின் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: எவ்வளவு கிளீவேஜை காட்டுவது நல்லது என்பது குறித்து நடிகைகள் டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

மகளிர் தினமான இன்று நடிகைகள் டாப்ஸி மற்றும் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் கிளீவேஜ் பற்றி பேசியுள்ளனர்.

அவர்கள் இருவரும் கூறியிருப்பதாவது,

அலுவலகம்

அலுவலகம்

அலுவலகத்தில் கழுத்து கூட தெரியாத அளவுக்கு உடை அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அலுவலகத்தில் கிளீவேஜ் எல்லாம் காட்டக் கூடாது அல்லவா.

ஜிம்

ஜிம்

ஒர்க் அவுட் செய்ய ஜிம்முக்கு சென்றால் கிளீவேஜ் தெரியாத வகையில் உடை அணிய வேண்டும். ஜிம்மில் வியர்த்துக் கொட்ட ஒர்க்அவுட் செய்வது மட்டும் போதாது கிளீவேஜ் தெரியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருமணம்

திருமணம்

பார்ட்டிக்கு சென்றால் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது துப்பட்டாவால் போர்த்திக் கொள்ள வேண்டும். திருமணத்தன்று அனைவரும் மணப்பெண்ணை பார்ப்பதால் அன்று கிளீவேஜை காட்டவே கூடாது என்று பேசியதோடு வீடியோ கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்து கலருக்கு மாறுகிறது. அதன் பிறகு நடிகைகளின் பேச்சும் மாறுகிறது.

கிளீவேஜ்

நாம் பெண்கள், மார்பகத்துடன் பிறந்துள்ளோம். அதில் கிளீவேஜை காட்டுவதில் என்ன தவறு. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது நம் பிரச்சனை அல்ல. எங்கள் மார்பகங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறி வீடியோவை முடித்துள்ளனர் டாப்ஸி, ஸ்வரா.

English summary
On International Women's Day, Swara Bhaskar and Taapsee Pannu talk about 'How much cleavage is good cleavage'. The video begins with the two ladies lecturing women about how to dress themselves fully, covered up in the office, at the gym, during evening walks and also during their wedding day!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil