நீதிபதியையே டென்ஷன் ஆக்கிய சமந்தா.. சட்டென அப்படியொரு வார்த்தையை சொல்லிட்டாரே?

ஹைதராபாத்: சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து விவாதம் நடத்திய சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சமந்தாவின் வழக்கறிஞர் கொடுத்த அழுத்தம் காரணமாக டென்ஷன் ஆன நீதிபதி சொன்ன விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா திடீரென விவாகரத்தை அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமந்தா விவாகரத்து

சமந்தா விவாகரத்து

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதெல்லாம் சும்மா வதந்தியாத்தான் இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கணவரை பிரிவதாக மனைவியும் மனைவியை பிரிவதாக கணவரும் ஒரே நேரத்தில் வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

என்ன காரணம்

என்ன காரணம்

விவாகரத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இருவருமே சொல்லாத நிலையில், சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் தான் காரணம் என்றும் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஏகப்பட்ட யூகங்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக கிளம்பின.

அதெல்லாம் இல்லை

அதெல்லாம் இல்லை

நடிகை சமந்தா கோபத்தின் உச்சத்திற்கே சென்று நான் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும், அபார்ஷன் செய்து விட்டதாகவும் வரும் தகவல்கள் எதுவுமே உண்மை கிடையாது என்று பதிவிட்டு தனது மன வேதனை கொட்டித் தீர்த்தார். ஆனால், விவாகரத்துக்கான காரணம் குறித்து மட்டும் இருவருமே இன்னமும் வெளிப்படையாக பேசவில்லை.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

நாக சைதன்யா விவாகரத்தை அறிவிக்க முழு காரணமும் நடிகை சமந்தா தான் என விவாதங்களை நடத்தி வீடியோக்களை வெளியிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா ஹைதராபாத் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார்.

அவசரமா விசாரிக்கணும்

அவசரமா விசாரிக்கணும்

யூடியூப் சேனல்கள் மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு நடிகை சமந்தாவின் வழக்கறிஞர் முரளி அழுத்தம் கொடுத்த நிலையில், நீதிபதி டென்ஷன் ஆகி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீதிபதி டென்ஷன்

நீதிபதி டென்ஷன்

நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது. உரிய நேரத்தில் உங்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும். யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்ததற்கு பதிலாக அவர்களை மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் என தனது கருத்தை அழுத்தமாக சொல்லி அவசரப்படுத்திய சமந்தா தரப்புக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஆன்மிக சுற்றுலா

ஆன்மிக சுற்றுலா

கணவரை பிரிந்த நிலையில், தனது தோழியுடன் ரிஷிகேஷில் ஆன்மிக சுற்றுலாவை மேற்கொண்ட நடிகை சமந்தா அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். தமிழில் விரைவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X