»   »  அன்றும் இன்றும் என்றும் நான் கமல் ரசிகை... இப்படிச் சொல்வது கௌதமி!

அன்றும் இன்றும் என்றும் நான் கமல் ரசிகை... இப்படிச் சொல்வது கௌதமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உத்தமவில்லன் தெலுங்குப் பட ஆடியோ ரிலீசில் கலந்து கொண்ட நடிகை கௌதமி, ‘நான் எப்போதுமே கமலின் ரசிகை' எனத் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்துள்ள படம் உத்தம வில்லன். இப்படம் தெலுங்கிலும் தயாரிக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் தெலுங்குப் பட பாடல் கேசட் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் சுருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


விழா மேடையில் கௌதமி பேசியதாவது:-


எனது வாழ்க்கையில்...

எனது வாழ்க்கையில்...

நான் எத்தனையோ படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளேன். வாழ்க்கையில் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்து உள்ளேன்.


அபிமான நடிகர்...

அபிமான நடிகர்...

எனது அபிமான நடிகர் கமலஹாசன் தான். அன்றும், இன்றும் என்றும் நான் அவரது ரசிகை' என்றார்.


பாபநாசம்...

பாபநாசம்...

நீண்டகாலமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை கௌதமி, தற்போது கமல் ஜோடியாக பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


திரிஷ்யம் ரீமேக்...

திரிஷ்யம் ரீமேக்...

இந்தப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக். தமிழில் கௌதமி நடிக்கும் கதாபாத்திரத்தை மலையாளத்தில் மீனா நடித்திருந்தார்.


English summary
The actress Gowthami has said that she is always a fan of Kamal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil