»   »  என் சொந்த வாழ்வை மற்றவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை- பிரியாமணி

என் சொந்த வாழ்வை மற்றவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை- பிரியாமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் சொந்த விஷயங்கள் குறித்து நான் யாருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகை பிரியாமணி கூறியிருக்கிறார்.

கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி பருத்திவீரனில் தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. இவருக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜ்க்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

விரைவில் இருவரும் தங்களது திருமணத் தேதியை அறிவிக்கவுள்ளனர். இந்நிலையில் என்னுடைய சொந்த வாழ்வு குறித்து நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என பிரியாமணி கூறியிருக்கிறார்.

I am Not Answerable to anyone says Priyamani

இதுகுறித்து அவர் ''என்னுடைய நிச்சயதார்த்தம் பற்றி நான் பகிர்ந்து கொண்டது ஒரு புதிய வாழ்வை நான் துவங்குகிறேன். அதற்கு உங்கள் எல்லோரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான்.

ஆனால் எனது நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்கள் மிக மோசமாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

மக்கள் தங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது சொந்த வாழ்க்கை குறித்து எனது பெற்றோர் மற்றும் என்னுடைய வருங்கால கணவர் தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை'' என்றிருக்கிறார்.

நடிகை என்றாலே கருத்துக்களை எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்ற போக்கு, சமூக வலைதளங்களில் தற்போது அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே பிரியாமணி இவ்வாறு கூறியிருக்கிறார்.

English summary
Actress Priyamani Said ''It's My life. I am Not Answerable to anyone Apart from My parents and my Fiance''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil