நிர்வாணமாக நடிக்க நான் சினிமாவுக்கு வரவில்லை... நல்ல கதை இருக்க வேண்டும்... ரஜினி பட நடிகை அதிரடி!

சென்னை: கதையே இல்லாத படங்களில் எல்லாம் நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. வா லைஃப் ஹோ டோ எய்ஸி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பெங்காலி, மராத்தி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

தோனி படத்தின் மூலம் என்ட்ரி

தோனி படத்தின் மூலம் என்ட்ரி

அடிக்கடி அவரது அந்தரங்க போட்டோக்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கை. இதனை பார்த்த ரசிகர்கள் வேண்டுமென்ற போட்டோக்களை வெளியிட்டு வருகிறீர்களா என கேட்டு விளாசியும் வருகின்றனர். தமிழில் தோனி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை ராதிகா ஆப்தே.

கபாலி படத்தில் ராதிகா ஆப்தே

கபாலி படத்தில் ராதிகா ஆப்தே

தொடர்ந்து கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஃபிளாஷ் பேக் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே. தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ராதிகா ஆப்தே. இதன் மூலம் பெரும் பிரபலமானார்.

இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப

இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப

கடைசியாக தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தி இங்கிலிஷ் என பிஸியாக உள்ளார் ராதிகா ஆப்தே. எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நடித்து கொடுப்பதால் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார் ராதிகா ஆப்தே.

விலைமாது கதாப்பாத்திரத்தில்...

விலைமாது கதாப்பாத்திரத்தில்...

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு நிர்வாணமாக நடிக்கும் கதாப்பாத்திரங்களே வருகிறது என கொட்டித்தீர்த்துள்ளார். அவர் கூறியதாவது, ''சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.

நான் அதிர்ச்சியாகிவிட்டேன்

நான் அதிர்ச்சியாகிவிட்டேன்

நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள். அதனால் தான் இந்தப் படத்திலும் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என்றார். அந்த இயக்குநர் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.

அதற்காக சினிமாவுக்கு வரவில்லை

அதற்காக சினிமாவுக்கு வரவில்லை

இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி? நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை.

Recommended Video

கர்ப்பிணியாக குத்தாட்டம் போடும் Alya Manasa & Jenifer | Bakkiyalakshmi, Raja Rani
கதையே இல்லாமல் நடிக்க மாட்டேன்

கதையே இல்லாமல் நடிக்க மாட்டேன்

கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் கவர்ச்சி காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்'' என்றும் தடாலடியாக கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சில படங்களில் ஆடையில்லாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X