»   »  எங்களைப் பார்க்காதீங்க, நடிப்பை மட்டும் பாருங்க... "பூ" ஒன்று புயலானது!

எங்களைப் பார்க்காதீங்க, நடிப்பை மட்டும் பாருங்க... "பூ" ஒன்று புயலானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் பொது சொத்து அல்ல. நடிகைகளின் நடிப்பை மட்டும் பாருங்கள். அவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் ரசியுங்கள். பொது சொத்தாக பார்க்கவேண்டாம் என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

தமிழில் பூ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. மரியான், சென்னையி ் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரு நாட்கள் படத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பி.வி.பி. நிறுவனத்தின் அதிகாரி ராஜீவ் காமினேனி, டைரக்டர் பொம்மரிலு பாஸ்கர், நடிகர்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, நடிகை பார்வதி, ஸ்ரீதிவ்யா, ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பார்வதி அளித்த பதில்களாவது:


சாதி பெயர்கள்...

சாதி பெயர்கள்...

சாதி ஒரு பெருமையான விஷயம் கிடையாது. அதனால் எந்த மதிப்பும் வரப்போவதில்லை. சாதி பெயரை வைத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என் பெயரில் இருந்து சாதி பெயரை நீக்கிவிட்டேன். என் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களில் மேனன் என்ற வார்த்தை கிடையாது.


வெறும் பார்வதி தான்...

வெறும் பார்வதி தான்...

பார்வதி என்று மட்டுமே ருக்கிறது. படங்களின் டைட்டிலில் கூட பார்வதி என்றே குறிப்பிடவேண்டும் என்று கூறியிருக்கிறேன். சாதி என்பது பெருமையான விஷயம் கிடையாது. எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்குக்கூட பள்ளிக்கூட விண்ணப்பத்தில் சாதி பெயரை குறிப்பிடமாட்டேன். சாதி, மதம், மொழி தெரியவேண்டும் என்ற அவசியமில்லை.


பொதுச் சொத்து அல்ல...

பொதுச் சொத்து அல்ல...

அது என் தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசக்கூடாது. நடிகைகள் பொது சொத்து அல்ல. நடிகைகளின் நடிப்பை மட்டும் பாருங்கள். அவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் ரசியுங்கள். பொது சொத்தாக பார்க்கவேண்டாம்.


நானே உதாரணம்...

நானே உதாரணம்...

இந்த கருத்துக்கு நான் உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக, படங்களில் மட்டுமே நடிக்கிறேன். விளம்பர படங்களில் நடிப்பதில்லை. கடை திறப்பு விழாக்களுக்கு செல்வதில்லை. அவை, என் வேலை அல்ல. என் வேலை நடிப்பதுதான்.


பணம் தேவை...

பணம் தேவை...

எனக்கு பணம் வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும் ‘பில்' கொடுப்பதற்கு பணம் வேண்டுமே. அதனால் என் நடிப்புக்கு தேவைப்படுகிற சம்பளத்தை கேட்டு வாங்குகிறேன்.


ஆடம்பர செலவுக்காக இல்லை...

ஆடம்பர செலவுக்காக இல்லை...

ஆடம்பர செலவுக்காக அதிக சம்பளம் கேட்பதில்லை. எனக்கு ‘ஆடி' காரில்தான் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை இல்லை.


உத்தமவில்லன் வேடம்...

உத்தமவில்லன் வேடம்...

எனக்கு காதலி வேடங்களில் நடித்து அலுத்துப்போய் விட்டது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


English summary
The ‘Maryan’ actress in a recent interview expressed her anger that some media are still addressing her as Parvathy Menon after the strong condemn from her. Even before years she had stated that media should not include Menon with her name. She added that Parvathy is her original name and her facebook page even has the same and she wants people to call her Parvathy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil