»   »  என்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் 2வது திருமணம் – சோனியா அகர்வால்

என்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் 2வது திருமணம் – சோனியா அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சோனியா அகர்வால் தன்னைப் புரிந்து கொண்ட ஒருவர் கிடைத்தால் 2 வது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

காதல் கொண்டேன் படத்தில் நடிகர் தனுஷின் ஜோடியாக அறிமுகமாகி பின்னாளில் அவரின் அண்ணன் செல்வராகவனின் நிஜ ஜோடியாக வாழ்க்கையில் இணைந்தவர். காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் நிஜ வாழ்க்கையில்,அந்தப் படத்தின் இயக்குநர் செல்வராகவனின் காதலியாக மாறியவர்.

I Am Ready For 2nd Marriage – Sonia Agarwal

தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் 7 G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார், 2006 ல் இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2010ம் ஆண்டில் விவகாரத்துப் பெற்று செல்வராகவனை விட்டுப் பிரிந்தார் சோனியா.

தற்போது செல்வராகவனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் உள்ளது, ஆனால் சோனியா அகர்வால் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திருமணத்தைப் பற்றி சோனியா அகர்வாலிடம் கேட்டபோது ‘ இப்போது நான் தனியாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன், எனக்கு நெருக்கமானவர்கள் என்னை 2 வது திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.

எனக்கும் அந்த ஆசை உள்ளது என்னைப் புரிந்து கொண்ட ஒருவர் கிடைக்கும் போது நான் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். விவேக்கின் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்து வெளிவந்த பாலக்காட்டு மாதவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Actress Sonia Agarwal Says” I Am Ready For My 2nd Marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil