»   »  அம்மா கணக்கு... அம்மாக்களும், மகள்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்: அமலாபால்

அம்மா கணக்கு... அம்மாக்களும், மகள்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்: அமலாபால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அம்மா கணக்கு' படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் இணைந்து தயாரித்துள்ளனர்.


தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் தனுஷின் அடுத்த தயாரிப்பு என்பதால் படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


மீண்டும் அம்மா...

மீண்டும் அம்மா...

அதோடு, திருமணத்திற்குப் பிறகு பசங்க 2 படத்தில் பொறுப்பான அம்மாவாக நடித்திருந்த அமலாபால், மீண்டும் இப்படத்தில் அம்மாவாக நடித்துள்ளார். அதிலும் இப்படத்தின் ஹீரோவே தான் தான் என்கிறார் அவர்.


சாந்தி...

சாந்தி...

நிஜத்தில் 24 வயதேயான அமலா பால், இப்படத்தில் 13 வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். படத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலாபால்.


கதைக்களம்...

கதைக்களம்...

படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆளாக்க அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பது குறித்து இப்படம் பேசுகிறது.


சவாலான வேடம்...

சவாலான வேடம்...

மைனா படத்திற்குப் பிறகு மிகவும் சவாலான வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளதாகக் கூறும் அமலாபால், ‘நிச்சயம் இப்படத்தில் வரும் அம்மா, எல்லாப் பெண்களுடனும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது ஒத்துப் போகும் கதாபாத்திரம். நிச்சயம் இந்தப் படம் எல்லா அம்மாக்களும், மகள்களும் பார்க்க வேண்டிய படம்' எனத் தெரிவித்துள்ளார்.


கூட்டிக் கழிச்சுப் பாருங்க...

கூட்டிக் கழிச்சுப் பாருங்க...

படத்தில் கணக்கு என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக வருகிறதாம். படம் பார்த்தப்பின் ஏன் இப்படத்திற்கு அம்மா கணக்கு என பெயர் வைக்கப்பட்டது என மக்களுக்கு புரியும் என்கிறார் அவர்.


English summary
Amala Paul reveals that Math, as a subject, is a key factor in the film and hence the title, Amma Kanakku. "When you watch the film (which incidentally releases today), you will understand why we chose this title," she says.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil