சென்னை: சகோதரர் அபிஜித் பாலுடனும் இருக்க முடியாது அவர் இல்லாமலும் வாழ முடியாது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பால் தான் காதலித்து திருமணம் செய்த இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்துவிட்டார். இருவரும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் விவாகரத்து குறித்து அமலா பால் கூறுகையில்,
மகிழ்ச்சி
தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன். உண்மையான மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவது இல்லை. நமக்குள் தான் உள்ளது.
யோகா
எனக்கு நெடுந்தூரம் ஓடப் பிடிக்கும். அதை செய்து வருகிறேன். மேலும் இஷா மையத்தில் கற்றுக் கொண்ட யோகா செய்து வருகிறேன். அது என் மனம் மற்றும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
சகோதரர்
எனக்கு என் சகோதரர் அபிஜித் பால் தான் மிகவும் ஆதரவாக உள்ளார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடனும் இருக்க முடியாது அதே சமயம் அவர் இல்லாமலும் வாழ முடியாது.
எதிர்கால திட்டம்
என் எதிர்கால திட்டங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. படங்களில் நடிக்க வந்தது, விவாகரத்து பெறுவது, இந்த பேட்டி அளிப்பது என்று# பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.