»   »  அமலாபாலும் நாட்டுக் கோழி பிரியாணியும்...

அமலாபாலும் நாட்டுக் கோழி பிரியாணியும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாட்டுக்கோழி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டும் அமலாபால் இனி பிரியாணியை கண்ணால் கூட பார்க்க முடியாதாம். காரணம் அவர் சைவத்திற்கு மாறிவிட்டாரம்.

வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது பாவம் என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். கிருஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பானது.

அசைவம் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடைசியில் சைவத்திற்கு மாறிவிடுவார்கள். அதேபோல இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலும் கிருஸ்துமஸ்க்கு பின்னர் சைவத்திற்கு மாறிவிட்டாராம்.

சைவம்

சைவம்

அமலாபாலுக்கு கோழி பிரியாணி என்றால் உயிர். அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் அவரை சைவத்துக்கு மாறும்படி விஜய் கூறி வந்தார். அதற்கு ஓகே சொல்லிய அமலா, கிருஸ்துமஸ் பண்டிகைக்குப் பின்னர்தான் சைவமாக மாறுவேன் என்று கண்டிசனாக கூறிவிட்டாராம்.

கிருஸ்துமஸ் குதூகலம்

கிருஸ்துமஸ் குதூகலம்

கிருஸ்துமஸ் தினத்தில் என் சிறுவயது விளையாட்டுக்கள் மனதில் நிழலாடுகின்றன. சகதோழிகளுடன் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று பாட்டுபாடி கிப்ட் வாங்கிய நாட்கள் மறக்க முடியாது என்கிறார் அமலாபால்.

பிரியாணி, கேக்

பிரியாணி, கேக்

கிருஸ்துமஸ் என்றதும் எனது அம்மா செய்யும் பிளம் கேக் ஞாபகத்துக்கு வந்துவிடும். அவ்வளவு சுவையாக கேக் செய்வார். கோழி பிரியாணி செய்வதில் என் அம்மா கைதேர்ந்தவர். இது எங்கள் வீட்டில் வருடாந்திர ஸ்பெஷல் ஐட்டம்.

கடைசியாக ஒரு வெட்டு

கடைசியாக ஒரு வெட்டு

சைவத்துக்கு மாற முடிவு செய்த நான், அதை கிருஸ்துமஸுக்காக தள்ளிப்போட்டேன். அம்மா செய்யும் சிக்கன் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டேன். இனி டோட்டல் சைவம்தான் என்கிறார் அமலா. காதலுக்காக இப்படி கோழி பிரியாணியை விட்டு கொடுத்துட்டாரே அமலாபால்.

விஜய் மாத்திட்டாரே

விஜய் மாத்திட்டாரே

சைவத்தை சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் கடை பிடிப்பதோடு நீண்ட காலமாக அசைவ பிரியையாக இருந்த மனைவியை சைவமாக்கிவிட்டாரே ஏ.எல்.விஜய் என்கின்றனர் கோலிவுட் பட உலகினர்.

English summary
For Amala Paul, December is her most favourite month of the year. Recalling her childhood Christmas memories, she says, "When I was really young, I remember going from house to house singing carols and getting lots of goodies from people. Even today, if I hear someone singing carols on the streets, I will run out to get a dekko."
Please Wait while comments are loading...