»   »  ரஜினியுடன் நடிக்கப் பிடிக்கும்.. ஆனால் ரொமான்ஸ் பண்ண வெட்கமா இருக்கே.. மண்டி தாக்கர்

ரஜினியுடன் நடிக்கப் பிடிக்கும்.. ஆனால் ரொமான்ஸ் பண்ண வெட்கமா இருக்கே.. மண்டி தாக்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசையாக இருந்தாலும், ரொமான்ஸெல்லாம் சரிப்பட்டு வராது, எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை மண்டி.

முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதும், டூயட் பாடுவதும் வெட்கமாக இருக்கிறது, தர்மசங்கடமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இப்போது ரஜினி போலவே பேசியுள்ளார் பாலிவுட் நடிகை மண்டி தாக்கர். சீனியர் நடிகர்களுடன் நடிக்க எனக்குப் பிடிக்கும். ஆனால் அதேசமயம், அவர்களுடன் ரொமான்ஸ் செய்வது போல நடிப்பது சங்கடமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மண்டி.

வித்தியாசமான மண்டி...

வித்தியாசமான மண்டி...

ரஜினியுடன் நடிக்க ஒவ்வொரு நடிகையும் போட்டா போட்டி போடுகிறார்கள். ரொமான்ஸ், டான்ஸ், பாட்டு என்று பட்டையைக் கிளப்பவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் மண்டி.

ஆர்வம்...

ஆர்வம்...

இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் ரஜினி சாருடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் உடனே ஏற்றுக் கொள்வேன். தயங்க மாட்டேன்.

வெட்கம்...

வெட்கம்...

ஆனால் என்னால் அவருடன் ரொமான்ஸ் செய்வது போல நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. வெட்கமாக இருக்கிறது. அது மட்டும் சரிப்பட்டு வராது.

அப்பா மாதிரி...

அப்பா மாதிரி...

அமிதாப் பச்சன் சாருடன் ரொமான்ஸ் செய்தால் எப்படி இருக்கும். அதேபோலத்தான் ரஜினி சாருடன் ரொமான்ஸ் செய்வதும். அவர்கள் அப்பா மாதிரி. எனவே ரொமான்ஸ் செய்வது போல இவர்களுடன் நடிப்பதற்கு சான்ஸே இல்லை" என்று கூறியுள்ளார் மண்டி.

பிரிட்டிஷ் நடிகை...

பிரிட்டிஷ் நடிகை...

மண்டி பம்பூ என்ற பாலிவுட் படத்தில் நடித்து அறிமுகமானவர். தமிழ், தெலுங்கிலும் கூட இவர் தலை காட்டியுள்ளார். இவர் ஒரு பிரிட்டிஷ் இந்திய நடிகை ஆவார். மாடலிங்கிலும் கலக்கிய அனுபவம் உடையவர்.

பஞ்சாபி படங்கள்...

பஞ்சாபி படங்கள்...

பஞ்சாபிப் படங்களில் மண்டி நிறைய நடித்துள்ளார். காரணம் இவரது பூர்வீம் பஞ்சாப் ஆகும். பாலிவுட் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் லண்டனிலிருந்து மும்பைக்கு ஓடி வந்தவர்.

பிரியாணி...

பிரியாணி...

சரி இவர் தமிழில் என்ன படம் நடித்துள்ளார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா.. வேறு என்ன வெங்கட்பிரபுவின் பிரியாணி படத்தில்தான் நடித்துள்ளார் மண்டி. மாயா என்ற கேரக்டரில் அந்தப் படத்தில் தலை காட்டியிருந்தார் மண்டி.

ரஜினியுடன் ஒரு படம்...

ரஜினியுடன் ஒரு படம்...

அட.. அதுக்குள்ள மாயாவை மறந்துட்டோமே.. சரி சரி ரஜினியுடன் சீக்கிரமே ஒரு நல்ல கேரக்டரில் நடிச்சிருங்க.. ஜென்மத்துக்கும் தமிழ் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் உங்களை.

English summary
A few years ago superstar Rajinikanth showed no qualms in stating that he does feel ‘awkward’ and ‘embarrassed’ each time he is asked to romance a heroine. Interestingly, it isn’t just him who gets jitters and faces discomfort in romancing co-stars, actress Mandy Takhar can never think of romancing a senior actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil