Don't Miss!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஜிப்ரான் சார் பாட்டுக்கெல்லாம் டிக்டாக் செய்திருக்கேன்.. ஜாங்கோ ஆடியோ லாஞ்சில் போட்டுடைத்த நடிகை!
சென்னை: ஜாங்கோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை மிருணாலினி இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடலுக்கு தான் டிக்டாக் செய்துள்ளதாக கூறினார்.
தமிழ் சினிமா வரலாற்றில் டைம் லூப் அடிப்படையில் முதல் முறையாக உருவாகி வரும் படம் ஜாங்கோ. ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடப்பதே டைம் லூப் எனப்படும்.
துப்பாக்கியுடன்
மிரட்டும்
சமுத்திரக்கனி…
வெளியானது
நான்
கடவுள்
இல்லை
மோஷன்
போஸ்டர்
!
இந்தப் படத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான சிவி குமார் மற்றும் ஜென் ஸ்டூடியோஸ் சுரேந்திரன் ரவி இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.

இணை இயக்குனர்
இயக்குநர் அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் மனோ கார்த்திகேயன். இதேபோல் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி
மேலும் சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் இயக்கியுள்ளார் மனோ கார்த்திகேயன். இந்த படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜாங்கோ ஆடியோ லாஞ்ச்
மேலும் பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நேற்று நடைபெற்றது.
Recommended Video

ஸ்ட்ராங்கான ஒரு கேரக்டர்
இதில் பங்கேற்ற நடிகை மிருணாளினி, பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி ஜாங்கோ படத்தில் தனக்கு ரொம்பவே வித்தியாசமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த படத்தில் ஸ்ட்ராங்கான ஒரு கேரக்டர் கொடுத்ததற்கு நன்றி தயாரிப்பாளர் சிவி குமார் மற்றும் இயக்குநருக்கு நன்றி கூறினார்.

ஜிப்ரான் பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளேன்
மேலும் இயக்குநர் மனோ கார்த்திகேயன் எப்போதும் அமைதியாக சிரித்த முகத்துடன் வேலை வாங்கி கொள்வார் என்றும் அவர் அமைதியின் உச்சக்கட்டமாக இருப்பவர் என்றும் கூறினார். மேலும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்து பேசிய மிருணாளினி, ஜிப்ரான் பாடலுக்கு தான் டிக்டாக் செய்துள்ளேன். எனக்கு இந்த படத்தில் இரண்டு பாடல் எனக்கு கொடுத்துள்ளார் என கூறியுள்ளார்.
பல நாள் பழகியது போல்
மேலும் கேமரா மேன் கார்த்திக் சார் என்னை அழகாக காட்டியிருக்கிறார். தூக்கத்தில் நான் டல்லாக இருப்பேன் ஆனால் என்னை எப்படி இவ்வளவு அழகாக காட்டினார் என்று தோன்றியது. கருணாகரன் தங்கதுரை என எல்லாரும் செட்டில் ஜாலியாக பழகினார்கள். ஒரு நாள் தான் ஒன்றாக நடித்தோம் பல நாள் பழகியது போல் இருந்தது. இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் இயக்குநர் அனைவருக்கும் நன்றி என கூறினார்.