»   »  மீண்டும் நடிக்க வருவேன் என நினைக்கவில்லை: ஜோதிகா உருக்கம்

மீண்டும் நடிக்க வருவேன் என நினைக்கவில்லை: ஜோதிகா உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் மீண்டும் நடிக்க வருவேன் என நினைக்கவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பல காலம் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் நடித்துள்ள 36 வயதினிலே படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் தவிர்த்து திரை உலகினரையும் கவர்ந்துள்ளது.


இந்நிலையில் சினிமா பற்றி ஜோதிகா கூறுகையில்,


மீண்டும் வருவேன்

மீண்டும் வருவேன்

நான் மீண்டும் நடிக்க வருவேனா என்றே எனக்கு தெரியாமல் இருந்தது. 36 வயதினிலே படத்தில் நடிக்கிறேன் என்ற முடிவை தெரிவிக்கவே நான் இரண்டு நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். எனக்கு குழந்தைகள் தான் பர்ஸ்ட், படங்கள் அடுத்து தான்.


36 வயதினிலே

36 வயதினிலே

7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்த முதல் நாள் பதட்டமாக இருந்தது. நான் எவ்வாறு இருக்கிறேன் என்பது தான் பெரிய கவலையாக இருந்தது. நான் முன்பை போலவே பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.


இடுப்பு வலி

இடுப்பு வலி

என்னுடைய எடை 35 கிலோ வரை அதிகரித்துவிட்டது. என் மகன் பிறந்த பிறகு இடுப்பு வலி வேறு. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நான் தினமும் யோகா செய்து வருகிறேன். வார இறுதி நாட்களை தவிர மீத நாட்களில் யோகா செய்து உடல் எடையை குறைத்துள்ளேன்.


திருமணம்

திருமணம்

சரியான வயதில் திருமணமாகி, சரியான வயதில் குழந்தைகளை பெற்றேன். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். பல பெண்களுக்கு தாங்கள் விரும்புவதை மீண்டும் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. திருமணத்தோடு ஒரு பெண்ணின் வாழ்வு முடிந்துவிடாது என்பதையே 36 வயதினிலே தெரிவிக்கிறது.


பிரேக்

பிரேக்

திருமணத்திற்கு பிறகு நான் படங்களை விட்டு விலகவில்லை. ஒரு குட்டி பிரேக் எடுத்தேன். தற்போது கணவர், குழந்தை என்றாகி என் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது. அதனால் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.


English summary
Jyothika told that she didn't even know that she will come back to movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil