twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டில் யாரும் சுஷாந்த் போல தற்கொலை செய்யக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய ஓவியா.. என்ன ஆச்சு?

    |

    சென்னை: மன அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் யாரும் சுஷாந்த் சிங் போல தற்கொலை செய்யக் கூடாது என மற்றொரு ட்வீட்டை போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் ஓவியா.
    பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்யலாமா? வேண்டாமா? உங்களின் கருத்து என்ன? என ரசிகர்கள் மத்தியில் வெடிகுண்டு ட்வீட் ஒன்றை போட்ட நடிகை ஓவியா, தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்களை தைரியமாக முன் வைத்து வருகிறார்.

    பிக்பாஸ் முதல் சீசனில், தற்கொலைக்கு முயன்ற நிலையில், நிகழ்ச்சியை விட்டு ஓவியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    கொரோனாவிலே நீங்க போயிடணும்.. எல்லை மீறிய நெட்டிசன்.. கடுப்பான அமிதாப் பச்சன்.. வச்சு விளாசல்!கொரோனாவிலே நீங்க போயிடணும்.. எல்லை மீறிய நெட்டிசன்.. கடுப்பான அமிதாப் பச்சன்.. வச்சு விளாசல்!

    ஓவர் பிரஷர்

    ஓவர் பிரஷர்

    உணர்வுகளுடன் விளையாடும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஒருவர், மற்றொருவருடன் மோதிக் கொள்ளும் வகையிலேயே, அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் எனும் பெயரில் மன ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு பிரபலங்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஸ்க்ரிப்டட்

    ஸ்க்ரிப்டட்

    பிக்பாஸ் ஷோ ஸ்க்ரிப்டட் என்றும் செமி ஸ்க்ரிப்டட் என்றும், இல்லை எல்லாமே ரியல் தான், எந்தவொரு ஸ்க்ரிப்ட்டும் இல்லை என்றும் பல விதமான கட்டுக் கதைகளும், உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எழுந்து வருவது தான் அந்த நிகழ்ச்சியின் சர்வதேச வெற்றி. தமிழிலில் இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக கடந்து விட்டன.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை

    பிக்பாஸ் நான்காம் சீசன் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில், நடிகை ஓவியா, திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா? கூடாதா? என்ற பரபரப்பு ட்வீட்டை போட்டு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

    டி.ஆர்.பிக்காக டார்ச்சர்

    டி.ஆர்.பிக்காக டார்ச்சர்

    மேலும், அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் இல்லை என அடுத்த ட்வீட் போட்ட ஓவியா, டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக, போட்டியாளர்களை தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு டார்ச்சர் பண்ணக் கூடாது என மற்றொரு ட்வீட்டை போட்டு டோட்டல் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார்.

    இன்னொரு சுஷாந்த்

    இன்னொரு சுஷாந்த்

    இந்நிலையில், தற்போது, தமிழ்நாட்டில் சுஷாந்த் நிலைமை இன்னொருவருக்கு வரக் கூடாது என்கிற ரீதியில், பதிவிட்ட நடிகை ஓவியா, அது தனது மிஸ்டேக் என்றும் பதிவிட்டு இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தின் உச்சியில் இருந்த நடிகை ஓவியா, திடீரென பைத்தியமாக நடித்தும், நீச்சல் குளத்தில் விழுந்து ஆரவ்வின் காதல் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்றதும் 2017ம் ஆண்டு பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

    சர்ச்சை

    சர்ச்சை

    நடிகை ஓவியா தொடர்ந்து, விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சர்ச்சையான வகையில், ட்வீட்களை போட்டு வருவதற்கான முழுக் காரணம் என்ன எனவும், அவருக்கு, அந்த நிகழ்ச்சியில் உண்மையாக என்ன நடந்தது என்றும், காண்ட்ராக்ட் போட்டுவிட்டால், போட்டியாளர்களை அவர்கள் இஷ்டத்துக்கு டார்ச்சர் செய்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

    English summary
    “A contract paper should not be the license to put someone in mental trauma or make dem commit suicide.” – Oviya stir the biggboss controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X