»   »  சத்தியமா, எனக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது: ரித்திகா சிங்

சத்தியமா, எனக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது: ரித்திகா சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு வெட்கம் என்றாலே என்னவென்று தெரியாது, எனக்கு வெட்கப்படவும் வராது என தெரிவித்துள்ளார் ரித்திகா சிங்.

இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையானவர் குத்துச் சண்டை வீராங்கனையான மும்பை பொண்ணு ரித்திகா சிங். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

அவர் ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து நடித்துள்ள சிவலிங்கா படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் குறித்து அவர் கூறுகையில்,

லாரன்ஸ்

லாரன்ஸ்

சிவலிங்கா படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. அதனால் அதற்கேற்ற உடை அணிந்து ஆடினேன்.

டான்ஸ்

டான்ஸ்

எனக்கு டான்ஸ் ஆட தெரியாது. ஒரு பாடலுக்கு ஆடும்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதில் புடவை வேறு அணிந்து டான்ஸ் ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது.

புடவை

புடவை

புடவை கட்டி பழக்கமே இல்லை. அப்படி இருக்கும் எனக்கு புடவை கட்டிவிட்டார்கள். புடவை இடுப்பில் நிற்காமல் நழுவிக் கொண்டே இருந்தது. என்னையும் புடவையில் ஆட வைத்துவிட்டனர்.

வெட்கம்

வெட்கம்

எனக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது. வெட்கப்படவும் வராது. எனக்கு திருமணம் நடக்கும்போது கூட மேடையில் வெட்கப் பட மாட்டேன் என்று ரித்திகா தெரிவித்துள்ளார்.

English summary
Sivalinga actress Ritika Singh said she doesn't know how to feel shy. She added that she won't feel shy even on her wedding day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil