»   »  தனுஷுக்கு பிடித்தது ஸ்ருதி ஹாஸனுக்கு சுத்தமாக பிடிக்காதாம்!

தனுஷுக்கு பிடித்தது ஸ்ருதி ஹாஸனுக்கு சுத்தமாக பிடிக்காதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்டார் என்ற வார்த்தை தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி ஹாஸன் கையில் சபாஷ் நாயுடு படம் மட்டுமே உள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி வெளியேறிவிட்டார். முழுமையான திரைக்கதையை அளிக்கவில்லை என்று காரணம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறியதாவது,

ஸ்டார்

ஸ்டார்

எனக்கு ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்காது. அந்த வார்த்தையோடு நிறைய பிரஷரும் சேர்ந்து வருகிறது. நான் விரும்புவதை செய்வதற்கு நல்ல சம்பளம் பெறுபவராக என்னை கருதுகிறேன்.(தனுஷுக்கு ஸ்டார் என்று அழைப்பது பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

கடவுள்

கடவுள்

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டேன். என் வாழ்வில் பல சங்கடங்களை கடவுளின் அருளால் கடந்து வந்துள்ளேன்.

அப்பா

அப்பா

என் அப்பா கமல் ஹாஸன் தான் என் சூப்பர் மேன். சபாஷ் நாயுடு படத்தில் அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம். அவர் என் வேலையில் திருப்தியாக இருப்பது எனக்கு பெருமை.

நடிகைகள்

நடிகைகள்

பிற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது நடிக்க வந்த புதிதில் கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போது எனக்கு அதை பற்றி கவலை இல்லை. அனைவரும் ஒன்று போன்று இருக்க முடியாது என்கிறார் ஸ்ருதி.

English summary
Shruti Haasan said that she doesn't like the word STAR as it comes with lot of pressure.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil