»   »  நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்: தீபிகா படுகோனே

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்: தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானியும் ரூ.50 கோடி வசூலை தாண்டி ரூ.100 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து தீபிகா கூறுகையில்,

2015

2015

2015ம் ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. 2013ம் ஆண்டு தான் எனக்கு ஸ்பெஷல் என்று நினைத்தேன். ஆனால் இந்த ஆண்டில் மூன்று ஸ்பெஷல் வெளியீடுகள் மற்றும் பல அருமையான நினைவுகள் என சிறப்பாக அமைந்துள்ளது.

கேட்க மாட்டேன்

கேட்க மாட்டேன்

இயக்குனர் கதையை கூறும்போது அது எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன். நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நானாக தான் முடிவு செய்வேன். அது வெற்றியோ, தோல்வியோ என்னுடயை பயணமாக இருக்க வேண்டும். பிறரின் முடிவுகளை நம்ப மாட்டேன்.

பணம்

பணம்

என் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று மட்டுமே நான் பார்ப்பது இல்லை. ஒரு படத்தின் வெற்றியை அது எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை வைத்து முடிவு செய்வது வருத்தம் அளிக்கிறது.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் டெல்லியைச் சேர்ந்தவர் என்று முதலில் நினைத்தேன். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது இன்னும் நினைவில் உள்ளது. நீங்கள் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டீர்களா என்று நான் அவரை கேட்டதற்கு நான் பந்த்ராவைச் சேர்ந்தவன் என்றார்.

தங்கை

தங்கை

என் தங்கை தான் என் படங்கள் பற்றி விமர்சனம் செய்வார். என் குடும்பத்தார் என் படங்களை பார்த்தாலும் என் தங்கை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என விமர்சிப்பார்.

English summary
Actress Deepika Padukone told that she doesn't listen to anyone when it comes to choose movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil