»   »  ‘நானொரு முட்டாளுங்க.. ஆனால் 'நோ' கவலை’... சன்னி லியோன்!

‘நானொரு முட்டாளுங்க.. ஆனால் 'நோ' கவலை’... சன்னி லியோன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சினிமாவில் தன்னைத் தானே முட்டாளாக்கி கொள்வதற்கு நான் கவலைபட்டது கிடையாது என தெரிவித்துள்ளார் நடிகை சன்னிலியோன்.

முன்னாள் நீலப்பட நடிகையான சன்னி லியோன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழிலும் வடகறி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடினார். தெலுங்கிலும் தற்போது சன்னி நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

33 வயதாகும் சன்னி லியோன் தற்போது ‘குச் குச் லூச்சா ஹை' என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். டி.வி.யில் பிரபலமாகி சினி்மாவிலும் அசத்தி வரும் ராம் கபூர் தான் இப்படத்தின் ஹீரோ.

இப்படத்தின் பிரோமஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் சன்னி லியோன் பேசியதாவது:-

பயிற்சி...

பயிற்சி...

இந்த சினிமா தான் எனது இயற்கையான இயல்புகளை வெளிக்கொண்டு வந்து உள்ளது. நான் சிறிதளவு இதற்காக பயிற்சி எடுத்து உள்ளேன்.

நகைச்சுவையான பெண் தான்...

நகைச்சுவையான பெண் தான்...

நான் எப்போதும் வேடிக்கையான பெண் இல்லை. ஆனால் என்னிடம் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது.

கவலையில்லை...

கவலையில்லை...

திரையில் என்னை நானே முட்டாளாக்கி கொள்வதில் நான் எப்போதும் பயந்தது இல்லை. சினிமாவில் எனது பாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் சிரித்தால் அது குறித்து நான் கவலைப்படுவது கிடையாது.

நகைச்சுவைக் குழு...

நகைச்சுவைக் குழு...

மக்களுக்கு தெரியாது அமெரிக்காவில் நான் சில நகைச்சுவை குழுக்களுடன் வேலை பார்த்தது. அந்த நடிப்பை இதில் பயன்படுத்தி உள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
She is known for her hot and glamorous avatar on the screen but actress Sunny Leone says she does not mind audience to laugh at her if the role demands.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil