»   »  என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மாட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மாட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் என் உணர்ச்சிகளை அடக்கி வைக்க மாட்டேன் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தனது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் விளாசித் தள்ளினார்.

இந்நிலையில் ரசிகர்கள் வேறு ஆளாளுக்கு கேள்வி கேட்க லட்சுமி மீண்டும் கோபம் அடைந்துள்ளார்.

உண்மை

@LakshmyRamki கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சொல்வதெல்லாம் உண்மையின் நிக முகத்தை காட்டிவிட்டனர். ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ராஜேஷ் லட்சுமிக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் என ரிஷி என்பவர் ட்வீட்டினார்.

லட்சுமி

ரிஷியின் ட்வீட்டை பார்த்த லட்சுமி கூறியிருப்பதாவது, @RishiAnand168 @RJ_Balaji @rajeshmdirector உங்களை போன்ற சிறந்த நபர்களுக்காக அவர்கள் இது போன்ற சிறந்த படங்களை எடுக்கிறார்கள். உங்களின் ஆதரவை தெரிவிக்க 10 முறை பாருங்கள் என்றார்.

கட்டுப்பாடு

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து ஒருவர் உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

உணர்ச்சிகள்

நான் என் உணர்ச்சிகளை அடக்கி வைக்க மாட்டேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Lakshmi Ramakrishnan tweeted that she doesn't suppress her feelings and carry emotional baggage.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil