Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிசாசு 2-ல வெறியுடன் நடிச்சிருக்கேன்... உற்சாகத்தில் நடிகை ஆண்ட்ரியா!
சென்னை: மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது
பிசாசு பாகம் இரண்டில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வருகிறார்
தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த ஆண்ட்ரியா பிசாசு இரண்டில் மொத்த வெறியோடு நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
பாலிவுட் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா ரஜினி...ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க

சவாலான கதாபாத்திரங்களை
அழகான பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது திறமைமிக்க நடிகையாக மாறியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்க ஆரம்பித்த இவர் இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். வட சென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் மிக போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றார்.

பல அடல்ட் காட்சிகளில்
இப்பொழுது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் ஏற்கனவே ஆண்ட்ரியா துப்பரிவாளன் என்ற படத்தில் நடித்திருப்பார். விஷாலின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார் அதைத் தொடர்ந்து இப்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிசாசு 2
எப்பொழுதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் மிஷ்கின் பிசாசு என்ற வித்தியாசமான பேய் படத்தை இயக்கினார். பேய்களை தேவதையாக பார்க்க வேண்டும் என கூறிய பிசாசு படத்தை ரசிகர்களும் கொண்டாடினார்கள். பிசாசு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது அதன் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஹாரர் பின்னணியில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வருகிறார். இதுவரை ஆண்ட்ரியா நடித்திராத அளவிற்கு இந்த படத்தில் அடல்ட் காட்சிகளிலும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

வெறியுடன் நடிச்சிருக்கேன்
இந்த நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா ஒரு வருடம் லாக் டவுன் காரணமாக நடிக்காமல் இருந்தேன். அந்த மொத்த வெறியையும் பிசாசு 2 படத்தில் காட்டியுள்ளேன். என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் பிசாசு 2. தரமணியில் மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்களின் கதையை கேட்டவுடன் எப்படி நடிக்க முடியாது என்று தோன்றியதோ அதேபோலதான் பிசாசு 2லும் நடிக்க முடியாது என்று தோன்றியது. ஆனால் இதில் என்னோட வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் காணலாம் என இந்த பேட்டியில் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.