»   »  மணிரத்னத்தின் ‘கண்மணி’ ஆன கதை... : நித்யாமேனன்

மணிரத்னத்தின் ‘கண்மணி’ ஆன கதை... : நித்யாமேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்சல்மான், நித்யாமேனன் நடித்த ‘ஓ காதல் கண்மணி' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் கதைக்களம். சர்ச்சையை உண்டாக்கும் கதை என்றாலும், திருமணத்தில் படத்தை சுபமாக்கி இருக்கிறார் மணிரத்னம்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் நித்யாமேனன். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

கதை பிடித்திருந்தது...

கதை பிடித்திருந்தது...

இயக்குனர் மணிரத்னம் கதை சொன்னபோது காதல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, என பல விஷயங்கள் இருந்தது.

பொருத்திப் பார்த்தேன்

பொருத்திப் பார்த்தேன்

அப்போதே கேரக்டரில் என்னை பொருத்தி பார்த்தேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம் என்று தோன்றியது. கதையும் மிகவும் பிடித்தது.

சமூக மாற்றங்கள்...

சமூக மாற்றங்கள்...

இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். அது சரியா, தவறா என்று யாரும் சொல்ல முடியாது. சமூகத்தில் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் பார்க்காமலேயே...

முன்பெல்லாம் பார்க்காமலேயே...

முந்தைய காலங்களில் ஒருத்தரையொருத்தர் பார்க்காமலேயே திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடைசிவரை சேர்ந்தே வாழ்ந்தார்கள்.

வித்தியாசமான கேரக்டர்கள்...

வித்தியாசமான கேரக்டர்கள்...

ஆனால் இப்போது அப்படி இல்லை. விருப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் கேரக்டர் மற்றும் கதையை புரிந்து நடித்தால் காட்சி நன்றாக வரும். எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் அமைகின்றன.

சிறு வேடமானாலும் ஓகே...

சிறு வேடமானாலும் ஓகே...

சிறு கேரக்டராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் சம்மதிப்பேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். சிறிய வேடமாக இருந்தாலும் வலுவானதாக இருந்தால் நடிப்பேன்' என இவ்வாறு அதில் நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Nithya menon has said that she acted in Ok Kanmani, because of the story.
Please Wait while comments are loading...