திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா

By Siva

தனக்கும், ஆஞ்சநேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று அனன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.

அனன்யாவுக்கு நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் அதை அவர் தன் பெற்றோரிடம் கூறவில்லை என்று பேசப்பட்டது. கட்டினால் ஆஞ்சநேயனைத் தான் கட்டுவேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து அனன்யா கூறியதாவது,

என்னை யாரும் வீட்டுச் சிறையில் எல்லாம் வைக்கவில்லை. எனது திருமணம் பற்றி யாரோ பிடிக்காதவர்கள் வதந்தியைக் கிளப்பிவிடுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது என் கையில் 5 படங்கள் உள்ளன. அதை நடித்து முடித்தவுடன் ஆஞ்சநேயனுடன் நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X