»   »  செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்

செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: செக்ஸ் பற்றி பேசும்போது தான் க்யூட்டாக இருப்பதாக நடிகை பியா பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

பொய் சொல்லப் போறோம் படம் மூலம் நடிகையானவர் பியா பாஜ்பாய். அவர் நடித்துள்ள இந்தி படமான மிர்சா ஜூலியட் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து அவர் கூறும்போது,

காதல் கதை

காதல் கதை

மிர்சா ஜூலியட் ஒரு அழகான காதல் கதை. இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை அருமையாக காட்டியுள்ளனர். இது ரோமியோ ஜூலியட் போன்ற ரொமான்ஸ் கிடையாது.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

நாயகியான ஜூலி சுக்லா அதாவது நான் மிர்சாபூர் பெண்ணாக நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரம் கடினமானது இல்லை. படத்தில் நான் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளேன்.

செக்ஸ்

செக்ஸ்

ஜூலி சுக்லா செக்ஸ் பற்றி பேசிக் கொண்டு கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் தில்லான பெண். அவளை தடுக்க யாராலும் முடியாது.

ஏன்?

ஏன்?

நான் நடித்துள்ள 3 இந்தி படங்களிலும் செக்ஸுக்கு முக்கியத்துவம் உள்ளது. இயக்குனர்கள் ஏன் இது போன்ற கதையுடன் என்னிடம் வருகிறார்கள் என்று ஒரு நாள் யோசித்தேன். செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டாக இருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் இது போன்ற கதாபாத்திரங்கள் என்னை தேடி வருகின்றன என்றார் பியா.

English summary
Pia Bajpai said that she thinks she looks cute when she talks about sex. Her character in her upcoming movie Mirza Juliet also talks about sex.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil