»   »  ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்!- ராதிகா ஆப்தே

ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்!- ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் ஜோடியாக நடிப்பதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன், என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக டோணி படத்தில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ஆனால் தமிழில் தொடர்ந்து பெரிய படங்கள் அமையவில்லை.

இந்த நிலையில் இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்தபோது, நிர்வாண சர்ச்சைகளில் சிக்கினார்.

உறுதி

உறுதி

இப்போது ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், இந்தப் படத்தில் நடிப்பதை ராதிகா ஆப்தேவே உறுதி செய்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

ரஜினி படத்தில் நடிப்பது அவர் கூறுகையில், "இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆகும். ரஜினியை விடவும் வேறு யாரையும் பெரிதாக நான் நினைக்க வில்லை. இயக்குநர் ரஞ்சித்தும் மிகவும் திறமையானவர்தான்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இந்தக் கனவு நிஜமானதில் நான் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன். ரஜினியைச் சந்திப்பதிலும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

இது எனக்கு கிடைத்துள்ள மிகவும் அரிய வாய்ப்பு. இதுபோன்ற படங்களுக்குப் பலத்த போட்டி இருக்கும். எனவே ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

சவாலான படம்

சவாலான படம்

கதை மிகவும் வித்தியாசமானது. என்னுடைய கதாபாத்திரமும் பலமாக இருக்கும். சும்மா நடனமாடிவிட்டுச் செல்வதை விடவும் நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அப்படி இல்லாமல் இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் நடித்திருப்பேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ரஜினியுடன் ஒரு படத்தில் நடிப்பதே அபாரமானது. என்னுடைய கதாபாத்திரமும் நல்ல இயக்குநரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியாக அமைந்துள்ளது," என்றார்.

English summary
Actress Radhika Apte says that she is one of the luckiest person to play in Rajini movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil