»   »  அய்யோ, இந்த பிரகாஷ் ராஜை பத்தி புகார் கூற முடியலையே: ஸ்ரேயா வருத்தம்

அய்யோ, இந்த பிரகாஷ் ராஜை பத்தி புகார் கூற முடியலையே: ஸ்ரேயா வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரகாஷ் ராஜ் பற்றி புகார் தெரிவிக்க முடியவில்லை என்று நடிரை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் தான் தயாரித்து, இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்தியிலும் அவர் தான் இயக்குகிறார் ஆனால் நடிக்கவில்லை.

உன் சமையல் அறையில் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

உன் சமையல் அறையில் பட இந்தி ரீமேக்கிற்கு தட்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சினேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா சரண் நடிக்கிறார். படத்தில் அலி பாசல், டாப்ஸி உள்ளிட்டோரும் உள்ளனர்.

இளையராஜா

இளையராஜா

உன் சமையல் அறையில் படத்திற்கு இசையமைத்த இளையராஜா தான் தட்காவுக்கும் இசையமைக்கிறார். உன் சமையல் அறையில் படம் மலையாள படமான சால்ட் அன்ட் பெப்பரின் ரீமேக் ஆகும்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா அவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது குறித்து ஸ்ரேயா கூறும்போது, நானும், பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குனரை பற்றி குறை கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம் என்றார்.

புகார்

புகார்

தற்போது பிரகாஷ் ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் புகார் கூற முடியவில்லை. படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார் ஸ்ரேயா.

English summary
Shriya Saran who is acting in Prakash Raj directorial Tadka says that she is not able to complain about the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil