»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை: குஷ்பு திடீர் முடிவு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை: குஷ்பு திடீர் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

இதை குஷ்புவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

குஷ்பு

குஷ்பு

நடிகர் சங்க தேர்தலில் தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை குஷ்பு ட்விட்டரில் அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

விஷால்

விஷால்

விஷால் நீதிமன்றம் சென்றதையடுத்து அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. சஸ்பெண்ட் ரத்தான கையுடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக விஷால் அறிவித்தார்.

கமல்

கமல்

வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவி 4ம் தேதி தான் கடைசி தேதி. இந்நிலையில் விஷால் கடந்த 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து கமல் ஹாஸன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

போட்டி

போட்டி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்கும், குஷ்பு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதை குஷ்பு மறுத்துள்ளார்.

இல்லை

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை. என்னால் 100 சதவீதம் நேரம் ஒதுக்க முடியாது. விஷால் அணி தான் சிறந்ததை செய்ய சிறந்த அணி என குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Actress Khushbu tweeted that, 'I m not contesting 4 any post in #ProducersCouncil as I knw I will not be able 2 give my 100% n time..Vishal n team r the best 2 do d best..'

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil