»   »  எல்லாமே வெறும் வதந்தியாம் சிவ்வ்வா: விஜய் ஹீரோயினே சொல்லிட்டார்

எல்லாமே வெறும் வதந்தியாம் சிவ்வ்வா: விஜய் ஹீரோயினே சொல்லிட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் படம் இயக்க உள்ளதால் தான் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்பது இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

அட்லீ விஜய்யை வைத்து இயக்கி வரும் விஜய் 61 படத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் நித்யா. நித்யாவுக்கு இயக்குனராகும் ஆசை வந்துவிட்டது. அதனால் அவர் புதுப்பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ள ரொம்பவே யோசிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து நித்யா கூறும்போது,

இயக்குனர்

இயக்குனர்

நான் இயக்குனர் ஆசையில் புதுப்படங்களை ஒப்புக் கொள்வது இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. நிஜமாகவே இந்த செய்தியை யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் இயக்குனர் ஆவதை பார்க்க பலர் காத்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இயக்குனர் ஆகிறேன் என்பதை கேட்க நன்றாக இருந்தாலும் அது உண்மை இல்லை.

நடிகை

நடிகை

நடிப்பிலேயே இன்னும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதன் பிறகு வேண்டுமானால் இயக்குனர் ஆகலாம்.

விஜய்

விஜய்

விஜய் படத்தில் மூன்று ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. நான் தற்போது தான் முதல் முறையாக விஜய்யுடன் நடித்துள்ளேன். விஜய் மிகவும் அமைதியானவர். அட்லீயுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார் நித்யா மேனன்.

English summary
Actress Nithya Menon said that there is no truth in people saying that she is going to direct a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil