»   »  ஆளவிடுங்க சாமி, கர்ப்பமானா சொல்றேன்: விஜய் நாயகி காட்டம்

ஆளவிடுங்க சாமி, கர்ப்பமானா சொல்றேன்: விஜய் நாயகி காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் கர்ப்பமாக இல்லை என்றும், கர்ப்பமானால் நிச்சயம் அறிவிப்பதாகவும் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிபாஷா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

கர்ப்பம் குறித்து ஆளாளுக்கு பேசுவதை பார்த்த பிபாஷா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

கர்ப்பம்

நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்பதை தெரிந்து கொள்ள நினைப்பது ஸ்வீட் ஆனால் எரிச்சலாகவும் உள்ளது. இது நடக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களை அதிருப்தி அடைய வைத்ததற்கு சாரி என பிபாஷா ட்வீட்டியுள்ளார்.

குழந்தை

தற்போதைக்கு குழந்தை பெற நாங்கள் திட்டமிடவில்லை. நாங்கள் திட்டமிடும்போது அது சந்தோஷமான செய்தியை எங்கள் நலவிரும்பிகளிடம் தெரிவிப்போம் என்கிறார் பிபாஷா.

நன்றி

நன்றி

தொடர்ந்து கணிப்பது போர் அடிக்கிறது. நான் எதையும் நேருக்கு நேர் சந்திப்பவள். அதனால் ஏதாவது எழுதினால் அதை எல்லாம் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி என பிபாஷா கூறியுள்ளார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வித்யா பாலன் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பிய போது அவரும் பிபாஷாவை போன்று தான் கடுப்பானார். நான் குழந்தை பெறுவது என் தனிப்பட்ட விஷயம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Bipasha Basu tweeted that, 'The curiosity about me being pregnant...is sweet and a tad annoying. I am sorry to disappoint the ppl who are so eager for this to happen.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil