»   »  நான் அப்படிச் சொல்லவே இல்லையே...! - லட்சுமி மேனன் திடீர் மறுப்பு

நான் அப்படிச் சொல்லவே இல்லையே...! - லட்சுமி மேனன் திடீர் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த ஒரு வாரமாக லட்சுமி மேனன் சினிமாவை விட்டுப் போகிறார் என்பதுதான் பேச்சாக இருக்கிறது.

அவர் விலக முடிவெடுத்ததற்கு இதுதான் காரணம் என்று ஆளாளுக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் அந்த செய்திகளையெல்லாம் மறுத்துள்ளார் லட்சுமி மேனன்.

படிப்பு

படிப்பு

அவர் கூறுகையில், "நான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். ப்ளஸ் டூ தேர்வு முடியும் வரை படங்கள் எதிலும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

நான் அப்படிச் சொல்லல...

நான் அப்படிச் சொல்லல...

மற்றபடி நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. நான் நடித்த அத்தனைப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். ஏராளமான வாய்ப்புகளும் வருகின்றன. நான் எதற்காக சினிமாவை விட்டுப் போகவேண்டும்?

பிடித்த வேடங்கள்

பிடித்த வேடங்கள்

எனக்குப் பிடித்த கதைககள், பிடித்த வேடங்களில் நடிப்பேன். ஆனால் இப்போதைக்கு தேர்வுக்காக கதைகள் கேட்பதை நிறுத்தி வைத்துள்ளேன். ஏப்ரல் 6-ம் தேதி எனக்கு பரீட்சைகள் முடிந்ததும், மீண்டும் கதை கேட்க ஆரம்பிக்கிறேன்," என்றார்.

கொம்பன்

கொம்பன்

லட்சுமி மேனன் நடித்த கொம்பனும், சிப்பாயும் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்தடுத்து புதுப்படங்களிலும் ஒப்பந்தமாகப் போகிறாராம்.

லட்சுமி மேனன் பேன்ஸ் ஹேப்பி?

English summary
Lakshmi Menon has clarified that she never said anything about quitting from film industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil