»   »  நான் ஒன்றும் ஜூவில் உள்ள விலங்கு இல்லை: மீடியா மீது பிரீத்தி பாய்ச்சல்

நான் ஒன்றும் ஜூவில் உள்ள விலங்கு இல்லை: மீடியா மீது பிரீத்தி பாய்ச்சல்

By Siva
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாய்ந்து, பாய்ந்து போட்டோ எடுக்க தான் ஒன்றும் ஜூவில் உள்ள மிருகம் இல்லை என்று பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தான் முதன்முதலாக தயாரிக்கும் இஷ்க் இன் பாரீஸ் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு பிராக்கில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது இந்தியா வரும் ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குட்சரை எதிர்பார்த்து காத்திருந்த சுமார் 40 புகைப்படக்காரர்கள் பிரீத்தியைப் பார்த்தும் போட்டோ மேல் போட்டோ எடுத்துத் தள்ளினர்.

வழக்கமாக அழகாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் அவர் அன்று என்னவோ முகத்தை மறைத்துக் கொண்டே சென்றுவிட்டார். அவரது தாடை வீங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்கு போனதும் அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

விமான நிலையத்தில் புகைப்படக்காரர்களால் எனது கால் சுளுக்கி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். அவர்கள் ஒழுங்காக கேட்டிருந்தால் நானே போஸ் கொடுத்திருப்பேன். அடுத்த முறை யாராவது இப்படி தள்ளிக்கொண்டு போட்டோ எடுக்கட்டும் ஒன்று அவர்களை தாக்குவேன் அல்லது போலீசில் புகார் கொடுப்பேன். நான் ஒரு மனுஷி ஜூவில் இருக்கும் விலங்கு அல்ல. எனது பாதுகாவலர் புகைப்படக்காரர்களை பிடித்துத் தள்ளியிருந்தால், உடனே மீடியாக்காரர்களை பிரீத்தியின் பாதுகாவலர் தாக்கினார் என்று செய்தி வரும்.

நல்ல வேளை இஷ்க் இன் பாரீஸ் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இல்லை என்றால் கால் சுளுக்குடன் நான் வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Preity Zinta who was snapped hiding her face in Mumbai airport tweeted that she ended up twisting her ankle because of the photographers there. Her tweet reads, "If photographers ask me politely I will oblige, but next time I will either attack someone or then file a police complaint because THIS IS NOT FAIR. I am a human being not some animal in the zoo!."

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more