»   »  நான் தான் நம்பர் 1 நடிகையாக்கும், சக நடிகைகளுக்கு வளர்ச்சியே இல்லை: கங்கனா

நான் தான் நம்பர் 1 நடிகையாக்கும், சக நடிகைகளுக்கு வளர்ச்சியே இல்லை: கங்கனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டிலேயே தான் தான் நம்பர் ஒன் நடிகை என்றும், பிற நடிகைகளுக்கு வளர்ச்சி இல்லை என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் இன்றை தேதிக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். ஒரு படத்திற்கு ரூ.11 கோடி வாங்குகிறார். தான் அவ்வளவு சம்பளம் வாங்க காரணம் உள்ளது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

28 வயதில் இரண்டு தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். கங்கனாவுடன் சேர்ந்து நடிக்க பிற முன்னணி நடிகைகள் அஞ்சுகிறார்கள். காரணம் நடிப்பில் தங்களை அவர் தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்பதால். இந்நிலையில் கங்கனா தனது சினிமா வாழ்க்கை பற்றி கூறுகையில்,

நடிகை

நடிகை

நான் பி கிரேட் படங்களில் தான் என் சினிமா வாழ்க்கையை துவங்கினேன். இன்றைக்கு நாட்டிலேயே நான் தான் நம்பர் ஒன் நடிகையாக்கும். என சக நடிகைகளுக்கு வளர்ச்சி இல்லை. அவர்கள் வளர முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டார்களோ அங்கேயே சிக்கியுள்ளனர்.

மெகாஸ்டார்கள்

மெகாஸ்டார்கள்

சில நடிகைகள் மெகாஸ்டார்களின் படங்களில் நடித்து சினிமா வாழ்க்கையை துவங்கினர். அவர்கள் ஒரே இரவில் சூப்பர் ஸ்டார்கள் ஆகினர். இன்றும் அப்படியே உள்ளனர்.

நடிகர்கள்

நடிகர்கள்

நான் நடிக்க வந்த புதிதில் ஏ கிரேட் நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர்களுடன் நடித்தால் நானும் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கானுடன் நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அப்போது தான் க்வீன் படம் எனக்கு கிடைத்தது.

வெற்றி

வெற்றி

என் படங்கள் எனக்காக வெற்றி பெறுகையில் நான் ஏன் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும். என் வாழ்வில் வெற்றி தாமதாக வந்தாலும் இனிப்பாக உள்ளது. எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன என்றார் கங்கனா.

English summary
When Kangana Ranaut looks back at her career, she smiles with pride. The Queen star says that while she has grown strength by strength from B-grade cinema to being the “number one actress of the country”, she considers that her contemporaries “have had no growth”.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil