»   »  மீண்டும் காதலில் விழ த்ரிஷா தயார், ஆனால்...

மீண்டும் காதலில் விழ த்ரிஷா தயார், ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் காதலில் விழ தான் தயாராக இருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக ஹீரோயினாக உள்ளார். மன்மதன் அம்பு படத்தை அடுத்து மீண்டும் கமல்ஹாஸனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் ஆசையும் அவருக்கு உள்ளது.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறுகையில்,

ரஜினி

ரஜினி

நான் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் ரஜினி சாருடன் மட்டும் நடிக்கவில்லை. அவருடன் சேர்ந்து நடித்தால் தான் என் சினிமா வாழ்க்கை முழுமை பெறும்.

சினிமா

சினிமா

சினிமா உலகில் நீண்ட காலம் நீடிப்பேன் என நினைக்கவில்லை. நடித்து பார்க்கலாமே என்று இளம் பெண்ணாக நடிக்க வந்தேன். நான் நடிக்க வந்ததில் என் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தது. எனக்கு சினிமா ஒத்து வராவிட்டால் விலகிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாக்குப்பிடித்துவிட்டேன்.

கமல்

கமல்

கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். முதல் முறையாக துப்பாக்கி எடுத்துள்ளேன்.

வருண் மணியன்

வருண் மணியன்

வருண் மணியனுடனான திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது பற்றி பலரும் பலவாறு கணிப்பது என்னை பாதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி நான் பேச விரும்பவில்லை.

காதல்

காதல்

நான் காதலில் விழ, திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன். அதை நான் சமூகத்திற்காக செய்ய விரும்பவில்லை. என்றைக்கு நான் எனக்கு ஏற்ற ஒருவரை சந்திக்கிறேனோ அன்று நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார் த்ரிஷா.

English summary
Trisha is ready to fall in love and to enter wedlock the day she meets a suitable person.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil